தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பெத்தூரை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் 32 வயதுடைய ஸ்ரீவெங்கடேஷ். இவருக்கு யமுனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கீதாவிற்கு இளவரசன் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் யாருக்கும் தெரியாமல் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர்.
இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி வெளியூருக்கு சென்று தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் மீது சந்தேகமடைந்த யமுனா அவரது போனில் உள்ள மெசேஜ்களை பார்த்த போது கீதாவுடன் தகாத உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே யமுனா இது குறித்து கீதாவிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரையும் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக அடிக்கடி கீதா மற்றும் யமுனாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த வாக்குவாதம் தகராறாக முற்றியுள்ளது. இதில் கீதாவின் கணவர் வெங்கடேஷ் யமுனாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் வருத்தமடைந்த யமுனா இது தனது கணவர் இளவரசனுக்கு தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து வேலையை முடித்து வீட்டிற்கு வந்த இளவரசன் வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இளவரசன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் வெங்கடேஷனை பின் தலை மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் சராமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த அவரது உறவினர் ஜலபதி என்பவரையும் தாக்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஸ்ரீவெங்கடேஷ் , ஜலபதி ஆகிய இருவரையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீவெங்கடேஷ் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மேலும் காயமடைந்த ஜலபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.