“கரும்பு தோட்டத்தில் அழுகி கிடந்த பெண்ணின் சடலம்” - அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன்.. உல்லாசத்திற்கு சென்ற இடத்தில் நடந்த தகராறு!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் சுஜாதா அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில்...
“கரும்பு தோட்டத்தில் அழுகி கிடந்த பெண்ணின் சடலம்” - அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன்.. உல்லாசத்திற்கு சென்ற இடத்தில் நடந்த தகராறு!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள அதானி கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதுடைய சுஜாதா. இவருக்கு கடந்த எள்ளு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். அப்போது சுஜாதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குமார் கல்லப்பா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுஜாதாவுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். சுஜிதா கிடைக்கும் வேலைகளை செய்து தனக்கென சிறிய அளவில் சொத்து சேர்த்து வைத்திருந்த நிலையில் குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வந்திருக்கிறார். ஆனால் குமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் சுஜாதா அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சுஜாதா “என் சொத்துக்காக தான் என்னிடம் பழகுறியா?” என கேட்டு குமாரை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த (மார்ச் 5) ஆம் தேதி வழக்கம் போல இருவரும் தனிமையில் இருக்க அருகில் இருந்த கருப்பு தோட்டத்திற்கு சென்றிருக்கின்றனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் குமார் சுஜாதவை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கிறார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து சுஜாதாவின் உடலை பார்த்த கருப்பு தோட்டத்தின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுஜாதாவின் உடலைக்கப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சுஜாதாவின் தாய் லீலாவதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சுஜாதாவுடன் உறவில் இருந்த குமார் தலைமறைவானது தெரிய வந்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரை தனிப்படை அமைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சுஜாதாவை கொலை செய்தது தெரியவந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com