க்ரைம்

“தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்த கள்ளக்காதலன்” - மனைவியை அந்த கோலத்தில் பார்த்த கணவன்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்!

15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற நிலையில் நிவேதிதாவிற்கும் பாக்கியராஜிற்கும் இடையே வாக்குவாதம்...

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பாக்கியராஜ். இவருக்கும் அதே பகுதியை 33 வயதுடைய நிவேதிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் கூலித்தொழில் செய்ய சென்ற பாக்யராஜ் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்திருக்கின்றனர். எனவே பாக்கியராஜ் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்த நிவேதிதாவிற்கு அப்பகுதியில் இருந்த 35 வயதுடைய சிவகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சென்னையில் இருந்த பாக்கியராஜிடம் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற நிலையில் நிவேதிதாவிற்கும் பாக்கியராஜிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கு மீறிய பழக்கத்தால் ஆனவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் இருவரின் பெற்றோர்களும் அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அவரது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் பாக்யராஜின் வீட்டின் கதவு திறக்காதால் பாக்யராஜின் தந்தை ராஜாமணி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது நிவேதிதா படுக்கையறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்ததைப் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலன் தனிமையில் இருக்கும் போது செல்போனில் படம் எடுத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்கியராஜ் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாக்கியராஜ் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.