“மிக்சர் கடைக்காரருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - நள்ளிரவில் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்… தந்தை மகன் கைது!

இரவு கடையை முடித்துவிட்டு திரும்பிய சின்னப்பனை வழிமறித்து கட்டையால் அடித்து...
“மிக்சர் கடைக்காரருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - நள்ளிரவில் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்… தந்தை மகன் கைது!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாகரல் பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய சின்னப்பன். இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே மொத்தமாக விற்பனை செய்யும் மிக்சர் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். எனவே இவரது கடையில் இவருக்கு உதவியாக பஞ்சான் என்ற வடமாநிலத்தவர் ஒருவரும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தேவி என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னப்பனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கணவனை பிரிந்து மகனுடன் விருத்தாசலம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னப்பனுக்கும் அவரது கடையில் பணிபுரியும் தேவிக்கும் இடையே வேலையை தாண்டிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தேவியின் கணவர் சரவணனை அவரது மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என பலமுறை கண்டித்திருக்கிறார்.

ஆனால் தேவி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்த நிலையில் தேவியின் நடத்தையின் மீது மேலும் சந்தேகமடைந்த சரவணன் அவரை கண்காணித்த போது சின்னப்பனுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே சரவணன் தனது மனைவியை தகாத உறவை கைவிடுமாறு கண்டித்து வந்திருக்கிறார். இருப்பினும் தேவி சின்னப்பனுடனான உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த சரவணன் அவரது தந்தையுடன் சேர்ந்து சின்னப்பனை கொல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கடையை முடித்துவிட்டு திரும்பிய சின்னப்பனை வழிமறித்து கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.

Admin

இந்த நிலையில் அதே மிச்சர் கடையில் பணிபுரியும் வடமாநில பஞ்சானன் நேற்று காலை பணிக்கு வந்த நிலையில் அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சின்னப்பனைப் பார்த்து அங்கிருந்து பயந்து ஓடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து வடமாநில நபர் தான் கொலை செய்து விட்டு தப்பிச் செல்வதாக நினைத்து வெங்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வடமாநில நபர் பஞ்சானன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின் படி சந்தேகத்தின் அடிப்படையில் தேவி மற்றும் அவரது கணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் தேவி சின்னப்பனுடன் கள்ள தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்து சரவணன் அவரது தந்தை சுபாஷ் உடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக்சர் கடைக்காரர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த நிலையில் அவர் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com