தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்திமஹால் தெருவில் வசித்து வருபவர் 50 வயதுடைய பூங்கொடி. இவர் அரூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் வளையல் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் மூத்த மகள் 29 வயதுடைய மகாலட்சுமி. இவரை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கோதியழகனூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் மகாலட்சுமி வெங்கடேஷ் தம்பதிக்கு 9 வயதில் நிதிஷ் என்ற மகனும் 5 வயதில் சாய் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து மகாலட்சுமி கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீடான தர்மபுரிக்கு வந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த (நவ 15) ஆம் தேதி மகாலட்சுமியின் தாய் வீட்டிற்கு அவரது கணவர் வெங்கடேஷ் சென்றுள்ளார்.
பின்னர் அரூரில் தாய் வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் அரூர் வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த மகாலட்சுமியின் 70 வயது பாட்டியான லட்சுமி அம்மாள் இருவரையும் சமாதானம் செய்து உள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனை பார்த்த பாட்டி லட்சுமி அவரது மகள் பூங்கொடியை அழைத்து வர பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றி கணவன் மனைவி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது இதில் வெங்கடேஷ் வீட்டிலிருந்த கத்தியால் மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கையில் வெட்டியதில் படுகாயமடைந்து மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அம்மா பூங்கொடி மற்றும் பாட்டி லட்சுமி வீட்டில் வந்து பார்த்தபோது மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரூர் பொறுப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.