க்ரைம்

“மருமகனுடன் கள்ள தொடர்பில் இருந்த மாமியார்” - வெட்டு காயங்களுடன் ஏரியில் மிதந்த கணவரின் சடலம்… காதலன் செய்த கொடூரம்!

அங்கு மிதப்பது காணாமல் போன ஆறுமுகத்தின் சடலம் என்பதை உறுதி செய்து...

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டம், எரங்காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல கடந்த (ஜன 07) ஆம் தேதி காலை கடைக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.எனவே உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் ஆறுமுகத்தை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்தனர்.

இதற்கிடையில் மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள தூதுரையன் ஏரியில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மிதப்பது காணாமல் போன ஆறுமுகத்தின் சடலம் என்பதை உறுதி செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தால் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறுமுகத்தின் மனைவியான ஜோதிக்கும் அதே பகுதியை சேர்ந்த சீதாராமன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். இதனை அறிந்த சீதா ராமனின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது சீதாராமன் ஜோதியிடம் தனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்ட நிலையில் உறவை கைவிட முடியாத ஜோதி அவரது மூத்த மகளை காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

பின்னர் அடிக்கடி ஜோதி வீட்டிற்கு செல்லும் சீதாராமன் அவருடன் தனிமையில் இருந்த நிலையில் இதனை அறிந்த ஜோதியின் கணவர் ஆறுமுகம் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி மற்றும் சீதா ராமன் ஆறுமுகத்தை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி சீதாராமன் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி ஆற்றில் தூக்கி வீசி சென்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜோதி சீதாராமன் உட்பட ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.