twins die 
க்ரைம்

"அந்த ஊசி போடாதீங்க"! சொல்ல சொல்ல யாரும் கேட்கலயே.. வயிற்றிலேயே இறந்த "இரட்டை குழந்தைகள்"! தாய் கண் முன்னே அரங்கேறிய "கொடுமை"

எங்களை போல மற்றவர்கள் இந்த மருத்துவமனையில் யாரும் ஏமாறக்கூடாது .

Anbarasan

தருமபுரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரவசத்திற்கு சேர்ந்த நந்தினி என்பவரின் இரட்டை குழந்தை இறப்பு உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் - நந்தினி தம்பதியர் இவர்களுக்கு கடந்த வருடம் திருமணமாகி இன்று பிரசவத்திற்காக தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள (குமுதா மருத்துவமனை) தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவியா்கள் செலுத்திய ஊசி காரணமாக திடிரென நந்தினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் வயிற்றில் இருந்த இரட்டைக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைகளுக்கும் தாய்க்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறி உடனடியாக ஆம்புலன்ஸ்யில் அனுப்பியுள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் இரட்டை குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் தனியார் (குமுதா ) மருத்துவமனையை முற்றுகையிட்டும் சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: "மாட்டு சாணம்.. மனித மலம்..சாக்கடை" - மூன்றையும் சேர்த்து வீசி "சவுக்கு ஷங்கர்" வீடு சூறையாடல்! ஒரு தெருவே நாற்றத்தில் தத்தளிக்கும் கொடுமை!

இது குறித்து பேசிய நந்தியின் கணவா் அருண்குமார்.

சென்ற ஆண்டு ஏழாவது மாதம் எனது மனைவி கருவுற்றார். மருத்துவர் ரம்யாவிடம் சிகிச்சை பெற்று கருத்தரித்தார். இரண்டு துடிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். பத்து மாதமும் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டோம். நான்காவது மாதம் உடல்நிலை பிரச்சினை ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் அப்பொழுது செலுத்திய ஊசி காரணமாக அவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அப்பொழுது மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்து பயன்படுத்தி போடப்படும் ஊசி உடலுக்கு ஒத்துவரவில்லை என்று தெரிவித்தார்கள். இன்று பிரசவ தேதியை தெரிவித்தார்கள்.

மேலும் படிக்க: "கடைசியாக" தோனியைப் பார்த்த சந்தோஷம்.. 2 கல்லூரி மாணவர்களின் உயிரை பறித்த "எமன்"! நள்ளிரவில் நடந்த கொடூரம் 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு டெஸ்டிங் இன்ஜெக்ஷன் போடுவதை பார்த்து என் மனைவி இந்த மருந்து எனக்கு ஒத்து வராது என்று தெரிவித்துள்ளார். அதற்குள் செவிலியர் அந்த மருந்து ஊசி மூலம் செலுத்தி உள்ளார். ஊசி போட்ட உடன் வாந்தி எடுத்து கீழே விழுந்து உள்ளார். உடல்நிலை மோசமான பிறகு . தனியார் மருத்துவமனை அவசர அவசரமாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். மருத்துவமனையில் அனுமதித்தபோது இரண்டு குழந்தைகள் இருந்தது எங்களுக்கு தெரியவந்தது எங்களை போல மற்றவர்கள் இந்த மருத்துவமனையில் யாரும் ஏமாறக்கூடாது என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்