திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டி தனுஷ்கோடி காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரும் பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. செந்தமிழ் செல்வனும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயதுடைய ஸ்டாலின் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
ஸ்டாலின் செந்தமிழ் செல்வனுடன் பேச அவரை அழைக்க என அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார் அப்போது ஸ்டாலினுக்கும் செந்தமிழ் செல்வனின் மனைவி சௌமியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே சௌமியா ஸ்டாலின் உடன் மணிக்கணக்கில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியும், போன் செய்து பேசிக்கொண்டும் இருந்துள்ளார்.
இதை அறிந்த செந்தமிழ்ச்செல்வன் அவரது மைத்துனர் மற்றும் மைத்துனரின் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி ஸ்டாலினை மது அருந்த செந்தமிழ் செல்வன் அழைத்துள்ளார் எனவே ஸ்டாலினும் மது அருந்த சென்ற நிலையில் இவர்களின் நடவடிக்கையை பார்த்து தனக்கு ஆபத்து என புரிந்து கொண்ட ஸ்டாலின் அவ்விடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். அதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்டாலின் தனது உயிருக்கு ஆபத்து என எழுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இரவு வெற்றிக்கு வந்து ஸ்டாலின் உறங்கி கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு சென்ற செந்தமிழ் செல்வன், அவரது மைத்துனர் ஆகியோர் ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை பெரியசாமியை அரிவாள் மற்றும் கத்தியால் தலை மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் வயிற்றில் பலத்த காயமடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெரியசாமிக்கும் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட ஸ்டாலினின் தம்பி வெங்கடேஷ் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஸ்டாலினின் வீட்டிற்கு சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டாலினின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஸ்டாலினின் தந்தை பெரியசாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் கொலையில் ஈடுபட்ட செந்தமிழ்ச்செல்வன், மைத்துனர் மதன்குமார் அவரது நண்பர்கள் பிரகாஷ்ராஜ் பாலமுருகன் ஆகியோரை பிடித்து அம்பளிக்கை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் . நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களிடையே ஏற்பட்ட பெண்ணின் தகாத தொடர்பால் கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.