மதுரையை பூர்விகமாக கொண்ட 31 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து வசித்து வந்துள்ளார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓராண்டாக குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. தன் வாழ்வாதாரத்திற்காக, குழந்தை பராமரிப்பிற்காகவும் வேலைக்கு போக முடிவெடுத்தவர், சென்னை போரூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார்.
மேலும் கணவர் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதால் எப்படியும் தன்னை விவாகரத்து செய்துவிடுவார் என நினைத்து, தனக்கு துணை வேண்டும் என கருதி மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக கடந்த நான்கு மாதம் முன்னர் திருமண தகவல் மையத்தில் தன் முழு விவரத்தை பதிவு செய்தும் இருக்கிறார்.
இந்த நிலையில் தாம்பரம் அடுத்த செம்பாக்கதைச் சேர்ந்த ராஜீவ் (35) என்பவர் IT துறையில், 85 ஆயிரம் சம்பளத்துடன் HR-ஆக பணிபுரிவதாக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் தானும் விவாகரத்தானவர் என கூறி, தனக்கு அப்பா, அம்மா கிடையாது தங்கைக்கு திருமணமாகிவிட்டது என பிரச்சினை இல்லாத குடும்ப சூழல் உள்ளதாகவும், சில ஆதரவான வார்த்தைகளுடனும் பேசியுள்ளார். அதன் பிறகு விதவிதமான உடைகளில், இளமையான தோற்ற போட்டோகளை தொடர்ச்சியாக அனுப்பி நெருக்கமாக பேசி வந்துள்ளார்.
இதனால் அவரை நேரில் பார்க்க ஆசை பட்ட அப்பெண் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் இரண்டு முறை சந்தித்து ஒன்றாக இருந்துள்ளனர். மேலும் அப்பெண்ணின் கணவரிடம் விவாகரத்து வாங்க உதவி செய்வதாக கூறி நகை மற்றும் பணத்தை கடந்த அக்டோபர் 28ம் தேதி வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் 13ம் தேதியில் இருந்து ராஜீவ் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டடுள்ளது. தொடர்ந்து முயற்சி செய்து பார்த்த பெண், தான் ஏமாற்றபட்டதாக உணர்ந்துள்ளார். உடனே சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் செம்பாக்கம் வீட்டில் மனைவி குழந்தை என குடும்பத்துடன் இருந்த ராஜீவ் இருப்பதை பார்த்து போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண் கொடுத்த புகாரின் போரில், ராஜுவை கைது செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இவர் ஒரு பெண்ணை மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்டோரை இதுபோன்ற காதல் வலை வீசி தனது கருணையான பேச்சில் மயக்கி பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை அனுபவித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் ராஜீவ் வேறு பெண்களிடமும் இதுபோல் ஏமாற்றியுள்ளாரா என மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் சிக்கி எதிர்காலம் என்ன ஆகும் என வேதனையில் இருக்கும் பெண்களுக்கு இரண்டாம் திருமண ஆசைகாட்டி அவர்களுடன் தனிமையில் இருந்து நகை, பணத்தையும் பறிக்கும் இதுபோல் நபரின் செயலில் சிக்காமல் இருக்க பெண்கள் கவனமாக விசாரித்து துணையை தேர்வு செய்ய வேண்டும் என காவல்துறையினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்