க்ரைம்

“விமான பணிப்பெண்ணிடம் திமுக எம்.எல்.ஏ செய்த அசிங்கம்” - விமானத்தில் வைத்து பாலியல் அத்துமீறல்… “சிங்கம்-3” பட பாணியில் நடந்த கைது!

சென்னை 6E-6724 விமானத்தில் வந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து...

Mahalakshmi Somasundaram

சென்னையிலிருந்து டெல்லி நோக்கி சென்ற IndiGo நிறுவனத்தின் 6E-2761 விமானத்தில் பணியாற்றிய பெண் பணிப்பெண்ணிடம் மது போதையில் தவறாக நடந்து கொண்டதாக கூறி, திருவள்ளூர் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த (பிப் 25) ஆம் தேதி அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், விமான பணிப்பெண் 25 வயதுடைய ஜெய வர்ஷினிஅளித்த புகாரின் பேரில், பயணிகளான பிரபாகரன் (36) மற்றும் தியாகு (36) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹெண்ணையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் மதுபோதையில் பயணித்த பிரபாகரன் மற்றும் தியாகு அந்த விமானத்தில் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த வர்ஷினியை அழைத்து அவரது சொந்த ஊரை கேட்டு கிண்டல் செய்ததுடன், ஒருமையில் பேசி அழைத்ததாகவும், பின்னர் முதல் எதிரியான பிரபாகரன் அவரது இடது தோள்பட்டையில் கை வைத்து அழுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வர்ஷினி தனது பணிக்கு பிறகு இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

இதுகுறித்து பாரதிய நியாய சட்டம் (BNS) பிரிவு 74 மற்றும் தமிழ்நாடு பெண்கள் தொந்தரவு தடுப்பு சட்டம் பிரிவு 4 கீழ் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக பிரபாகரன் மற்றும் தியாகுவிற்கு அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள் ஆஜராகவில்லை என சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கோள் போலீசார் நேற்று டெல்லியில் இருந்து சென்னை 6E-6724 விமானத்தில் வந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவரும் விமான பணிப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்ட நிலையில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகி கிருஷ்ணகிரியில் இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக நிர்வாகி விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.