க்ரைம்

இரட்டை கொலை.. சடலத்துடன் உடலுறவு கொண்ட திருடன்! நோட்டமிட்டது முதல் சிக்கியது வரை.. திடுக்கிடும் வாக்குமூலம்?

கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு திருடும் நோக்கத்தில் வந்த

Muthu Lakshmi

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் கணவன், மனைவி இருவரையும் கொடூரமாகக் கொலை செய்ததுடன், பெண்ணின் உடலையும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 25 வயது இளைஞரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.

கன்னோஜ் மாவட்டம் குர்சஹைகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பழைய அரசு குடியிருப்பில் சஞ்சீவ் கதேரியா (35), அவரது மனைவி ஷிகா (32) மற்றும் அவர்களது 2 வயது மகள் வசித்து வந்துள்ளனர். இவர் சஞ்சீவ் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த நவம்பர் 4-ம் தேதி இரவு, கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு திருடும் நோக்கத்தில் வந்த யோகேஷ் சிங் ராஜ்புத் என்ற இளைஞர், முதலில் சஞ்சீவை தடியால் தாக்கிக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அவரது மணவை ஷிகாவையும் கொடூரமாக தாக்கி, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஷிகாவின் உடலை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் அவர்களது 2 வயது மகளும் தாக்கப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், யோகேஷ் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தபோது, சஞ்சீவ் பயணச்சீட்டு விற்பனை மூலம் பணம் பெறுவதைப் பார்த்துள்ளார். இதனால் அந்தக் குடும்பத்திடம் பணம் இருக்கும் என நினைத்து திருட திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நவம்பர் 4-ம் தேதி இரவு அந்த வீட்டுக்குச் சென்ற அவர், கணவன், மனைவி தூங்குவதற்காகக் காத்திருந்துள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்த தார்ப்பாயைக் கிழித்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது சஞ்சீவ் விழித்துக்கொண்டதால் அவரைத் தடியால் தாக்கி கொலை செய்துள்ளார். தொடர்ந்து ஷிகா கூச்சலிட முயன்றுள்ளார். இதனால் அவரது கையில் இருந்த கொலை செல்போனை உடைத்துவிட்டு, அவரை தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நவம்பர் 5-ம் தேதி காலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, கணவன், மனைவி இருவரும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது அவர்களது 2 வயது மகள் தந்தையின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து யோகேஷை (25) அடையாளம் கண்டுள்ளனர். இதற்கிடையே, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போலீசார், நவம்பர் 15-ம் தேதி அவனை பிடிக்கச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் யோகேஷின் இரு கால்களிலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து யோகேஷை (25) அடையாளம் கண்டுள்ளனர். இதற்கிடையே, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போலீசார், நவம்பர் 15-ம் தேதி அவனை பிடிக்கச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் யோகேஷின் இரு கால்களிலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், யோகேஷ் ஏற்கனவே இதே குர்சஹைகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பணிப்பெண்ணைக் கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் நுழைந்து இரட்டை கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.