க்ரைம்

அரை நிர்வாணத்துடன் பெண்களை அச்சுறுத்திய போதை ஆசாமி.. சிறுமிகளை வழிமறித்து அட்ராசிட்டி!

பைக்கில் செல்ல முயன்ற இளம்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசி விரட்டியுள்ளார்..

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காவல் நிலையம் நான்கு சாலைகள் சந்திக்கும் பிரதான பேருந்து நிறுத்தம் மற்றும் பள்ளிகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த வரும் போதை ஆசாமிகள் பள்ளி சென்று திரும்பும் சிறுமிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை வழிமறித்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போதை ஆசாமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயர்கள் பிடித்து இழுத்து அந்த வழியாக வந்த இளம்பெண் ஒருவரை அச்சுறுத்தியுள்ளார். பின்னர் பள்ளி முடிந்து அந்த வழியாக நடந்து சென்ற நான்கு பள்ளி சிறுமிகளை பின் தொடர்ந்து சென்று தகாத வார்த்தைகள் பேசி அச்சுறுத்தியதால் அந்த சிறுமிகள் வேகமாக நடந்து சென்று போதை ஆசாமியின் அச்சுறுத்தலில் தப்பியுள்ளனர்.

மீண்டும் கேபிள் வயரை இழுத்து பிடித்தபடி சாலையில் நின்று அட்ராசிட்டியில் ஈடுபட்ட அந்த போதை ஆசாமியை போலீஸார் விரட்டிய நிலையில் போலீஸார் சென்ற பின் மீண்டும் அந்த வழியாக வந்த அரசு பேருந்தை கைகளால் அடித்து தாக்கியும் மினி பேருந்தை வழிமறித்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பள்ளி மாணவர்களை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி தாக்க முயன்ற போது அந்த மாணவர்கள் போதை ஆசாமி மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாணவர்களின் தாக்குதலுக்கும் அடங்காத அந்த போதை ஆசாமி அரை நிர்வாணத்துடன் வந்து பள்ளி சென்று திரும்பி மகனுடன் பைக்கில் செல்ல முயன்ற இளம்பெண்ணை தகாத வார்த்தைகள் பேசி விரட்டியுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்த சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

தினம்தோறும் பள்ளி சென்று திரும்பும் சிறுவர் சிறுமிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போதை ஆசாமிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலையில் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டும் பொதுமக்கள் குளச்சல் போலீஸார் பள்ளி நேரங்களில் டாஸ்மாக் கடை முன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு பள்ளி சிறுவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் போதை ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.