க்ரைம்

“மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு” - காவலாளியை தவறாக பேசிய தந்தை மற்றும் மகன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்!

அப்போது சக்திவேல் மற்றும் ஐயப்பனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்...

Mahalakshmi Somasundaram

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கே.என் பாளையம் நரசபுரம் பகுதியைச் சேர்ந்த வேதனாண்டி என்ற ஐயப்பன்(51), மற்றும் அவரது மகன் மாதேஷ்(30) ஆகியோர் பெரும்பள்ளம் அணைக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர், பெரும்பள்ளம் அணையில் 14 மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதி பெற்றுள்ளனர், அணையில் மற்ற நபர்கள் மீன் பிடிக்காமல் இருப்பதற்கு 51 வயதுடையா சக்திவேல் என்பவரை காவலாளியாக நியமித்துள்ளனர்.

இந்நிலையில் வேதனாண்டி மற்றும் அவரது மகன் மாதேஷ் ஆகியோர் வந்து மீன் பிடிக்கும் போது சக்திவேல் “உங்க கிட்ட மீன் பிடிக்க அனுமதி இருக்க அனுமதி இருந்த புடிங்க இல்லனா பிடிக்காதிங்க” அதற்கு ஐயப்பனும் அவரது மகன் மாதேஷ் ஆகிய இருவரும் அனுமதி இல்லாமல் மீன் பிடிக்க வந்துள்ளனர் என்பதை அறிந்து அதை தட்டி கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது சக்திவேல் மற்றும் ஐயப்பனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஐயப்பன் மற்றும் அவரது மகன் மாதேஷ் சக்திவேலை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

எனவே ஆத்திரம் அடைந்த சக்திவேல், அவரது உறவினர்களான சௌந்தரராஜன், கௌதம் ஆகியோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். எனவே நேரில் வந்த இருவரும் சக்திவேலுக்கு ஆதரவாக இருந்து மீன்பிடிக்க வந்த ஐயப்பன் மற்றும் அவரது மகன் மாதேஷை தட்டி கேட்டுள்ளனர். அப்போதும் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த சௌந்தராஜன் மற்றும் கெளதம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் கத்தியால் வெட்டியதால் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் அவரது மகன் மாதேஷ் என்பவருக்கு கை கால்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தவரை அங்கு மீன்பிடிக்க வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாக உள்ள சக்திவேல், சௌந்தரராஜன், கௌதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.