ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாசப்பன் வீதியைச் சேர்ந்தவர் 43 வயதுடைய புஷ்பராணி. இவரது கணவர் வடிவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். எனவே புஷ்பராணி அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிவந்த கவுந்தப்பாடியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
தொடர்ந்து இருவரும் மூன்று வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்த நிலையில் புஷ்பராணி மகேந்திரனை தன்னுடன் அடிக்கடி உல்லாசத்தில் இருக்க வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்த காரணத்தால் இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பை பற்றி மகேந்திரனின் மனைவியிடம் கூறிவிடுவேன் என மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது அக்கா கணவர் சதீஷ் என்பவருடன் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு புஷ்பராணியை தனிமையில் இருக்க அழைத்த மகேந்திரன் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த தெப்பையாறு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் புஷ்பராணியிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கட்டு கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தொப்பையாறு பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்நிலையில் தனது தாயை காணவில்லை என மகள்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது புஷ்பராணி கடைசியாக மகேந்திரன் என்பவருடன் போனில் பேசியதும் அவர்களுக்கு இடையே இருந்த கள்ளக்காதல் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. எனவே மகேந்திரனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தனது அக்கா கணவருடன் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்து வீசியது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பராணியின் உடலை மீட்ட காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.