உத்திரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் பகதூர் பகுதியை சேர்ந்தவர் மாய தேவி (50) இவர் தனது காதலனோடு சேர்ந்துகொண்டு தனது கணவரை கொலை செய்து பல துண்டுகளாக்கி பலவேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சதித்திட்டம் தீட்டிய மனைவி!
முன்னாள் ராணுவ வீரரான தேவேந்திர குமார் பகதூர் பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு அம்பலி என்ற மகளும் உள்ளார். இவர் மனைவி மாய தேவிக்கு லாரி ஓட்டுநாரான அணில் யாதவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் காதலாக மாறிய உடன் தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் தேவேந்திர குமாரை கொல்ல முடிவெடுத்துள்ளனர்.
உடனே அனில் யாதவ் தனது கூட்டாளிகளான மிதிலேஷ் பட்டேல், சதிஷ் யாதவுடன் இணைந்து தெய்வேந்திர குமாரை அவரது வீட்டிலேயே வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரின் உடலை ஆறு துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் போட்டுள்ளனர்.
நாடகமாடிய மனைவி!
அதன் பின்னர் போலீஸ் விசாரணையில் இருந்து தப்புவதற்காக கணவரை காணவில்லையென மாயா தேவியே சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் கடந்த சனிக்கிழமை பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு கிடந்த கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதிலிருந்து விசாரணையை முடிய போலீசாரின் தேடுதலில் தெய்வேந்திர குமாரின் மற்ற உடல் பாகங்கள் அருகிலிருந்த கிணற்றிலும் கிடைத்துள்ளன.
இந்நிலையில் தந்து தந்தையின் சாவில் தன் தாய்க்கு தொடர்பிருக்கிறது.. என அம்பலி போலீசில் புகார் அளித்தார்.
துண்டிக்கப்பட்ட தலை!
தொடர்ந்து மாயா -விடம் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது காதலன் அனில் உதவியுடன் தானே தனது கணவரை கொன்று தலையை வெட்டி ஆற்றில் போட்டு மற்ற உடல் பாகங்களை வெவேறு இடங்களில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இவரின் வாக்குமூலத்தை அடுத்து கடந்த செவ்வாய் கிழமை மிதிலேஷ், சதீஷ், அணில் ஆகிய மூவரோடு சேர்த்து மாயாதேவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் நீச்சல் வீரர்கள் துணையுடன் தேவேந்திர குமாரின் உடலையும் தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கள்ளகாதலனோடு சேர்ந்து கணவரை கொள்ளும் வழக்குகள் உ.பி -யில் அதிகரித்து வருகின்றன. மீரட்டில் ஒரு பெண் தன் காதலனோடு சேர்ந்து கணவரை கொன்று சிமெண்ட் போட்டு மூடினார். டியோரியாவில் ஒரு பெண் துபாயிலிருந்து திரும்பிய கணவனை பத்தே நாட்களில் கொன்று சூட்கேசில் அடைத்தார். அதன் பின்னர் ஔரையா பகுதியில் திருமணமான 15 நாட்களில் காதலனோடு கணவனை கொன்றுள்ளார். இப்படி பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என ஆர்வர்லர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.