க்ரைம்

“தங்கைக்கு ஏற்பட்ட கள்ளக்காதல்” - இருவரையும் தனிமையில் பார்த்த சகோதரர்கள்… காதலனை கொன்று கார் ஏற்றி உடலை நசுக்கிய கொடூரம்!

தனை தொடர்ந்து குஷ்பூ வீட்டிற்கு சென்று சுல்பிகர் அவருடன் தனிமையில் இருந்ததாக ...

Mahalakshmi Somasundaram

பீகார் மாநிலம், ஆராரிய மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்பிகர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நிறுவனத்தின் சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரு நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். அப்போது சுல்பிகருக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய குஷ்பூ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்கள் பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

எனவே இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுல்பிகருக்கு போன் செய்த குஷ்பூ வீட்டில் யாரும் இல்லை எனவே வீட்டிற்கு வர சொல்லி அழைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து குஷ்பூ வீட்டிற்கு சென்று சுல்பிகர் அவருடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த குஷ்பூவின் அண்ணன்கள் அவர்களது தங்கையின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த இருக்கின்றனர்.

பின்னர் இது தொடர்பாக குஷ்பூவை கண்டித்திருக்கின்றனர்.

அப்போது குஷ்பூ “நான் சுல்பிகரை தான் காதலிக்கிறேன் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்” என கூறியுள்ளார். எனவே குஷ்பூவின் சகதோரர்கள் சுல்பிகாரிடம் திருமணம் குறித்து பேசியபோது அவரிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தெரியாமல் குஷ்பூவிடம் பேசிவிட்டேன் என்னை விட்டு விடுங்கள் என தெரிவித்திருக்கிறார். மேலும் குஷ்பூவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குஷ்பூவின் சகோதரர்கள் சுல்பிகரை தனியாக அழைத்து சரமாரியாக அடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் கொலை என்பது வெளியில் தெரியகோபாது என இணைத்து அவரது உடலை தேசிய நெடுசாலையில் போட்டு அதன் மீது கரை ஏற்றி உடலை நசுக்கி உள்ளனர். பின்னர் அவரது உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இளம்பெண் உட்பட்ட அவரது மூன்று சகோதரர்களை கைது செய்தனர். தங்கையுடன் தகாத உறவில் இருந்த வாலிபரை அண்ணன்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.