மனைவி டியூஷன் எடுக்க.. மாணவியிடம் கணவன் செய்த வெட்கக்கேடான செயல்! 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

11 வயது சிறுமி என்றும் பாராமல், அந்தச் சிறுமிக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளை விக்னேஷ் கொடுத்ததாகக்...
மனைவி டியூஷன் எடுக்க.. மாணவியிடம் கணவன் செய்த வெட்கக்கேடான செயல்! 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
Published on
Updated on
1 min read

கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அப்பகுதியில் குளிர்சாதன பெட்டிகளைப் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகளை எடுத்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இவர்களது வீட்டிற்குத் தினமும் மாலையில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர், சிறுமியர் பாடம் படிப்பதற்காக வந்து சென்றுள்ளனர்.

வழக்கம் போல், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவர் விக்னேஷின் மனைவியிடம் பாடம் படிப்பதற்காகத் தனிப்பயிற்சி வகுப்புக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த விக்னேஷ், பாடம் படிக்க வந்த அந்தச் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். 11 வயது சிறுமி என்றும் பாராமல், அந்தச் சிறுமிக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளை விக்னேஷ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. படிக்க வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையால் அந்தச் சிறுமி மிகுந்த மனவேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளார்.

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக இது குறித்துக் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைக்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். சிறுமியின் தாயார் அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

காவல் துறையினரின் விசாரணையில், குளிர்சாதன இயந்திரப் பழுது நீக்குபவரான விக்னேஷ், சிறுமியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உடனடியாக விக்னேஷைக் கைது செய்த போலீஸார், அவரிடம் மேல் விசாரணை நடத்தினர். விசாரணக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட விக்னேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் புதுக்கோட்டையில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கல்வி கற்க வந்த இடத்தில், சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் கும்பகோணம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அனுப்ப வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com