ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவர் வக்கீலாக பணியாற்றி வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீசா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். சத்தியநாராயணன் எப்போது வேலை வேலை என நீதிமன்றத்திற்கு சென்றுவிடும் நிலையில் ஸ்ரீசா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அதே பகுதியில் உள்ள தன்னுடன் கல்லூரி படித்த சுரேஷ் என்பவருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாற்றியுள்ளது. எனவே சத்தியநாராயணன் இல்லாத போது ஸ்ரீசா அடிக்கடி சுரேஷை தனிமையில் சாதித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல சுரேஷும் அடிக்கடி ஸ்ரீசா வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். இதனை அறிந்த சத்தியநாராயணன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் ஸ்ரீசா தொடர்ந்து சுரேஷுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியநாராயணன் தனது மனைவியை சரமாரியாக அடித்து காயப்படுத்தியுள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ஸ்ரீசா மூலமாகவே சுரேஷை அவரது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு ஆட்களுடன் காத்திருந்த சத்தியநாராயணன் சுரேஷை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் வீசி விட்டு வழக்கம் போல தனது வேலைகளை செய்து வந்துள்ளார்.
சுரேஷை காணவில்லை என தேடி வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வந்த போலீசாருக்கு ஆற்றில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு சாக்கு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சுரேஷின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுரேஷின் போன் சிக்னலை வைத்து கடைசியாக ஸ்ரீசா வீட்டில் வீட்டில் சுரேஷ் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் ஸ்ரீசாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது இதையடுத்து ஸ்ரீசா மற்றும் சத்தியநாராயணனை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.