க்ரைம்

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் உயிரிழப்பு!

Malaimurasu Seithigal TV

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

சென்னை புளியந்தோப்பு, நரசிம்ம நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவை தவிர ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. கூலிப்படை தலைவ னாகவும் செயல்பட்டு வந்துள்ளார். அவரும் நண்பர் மாது ஆகிய இருவரும் இன்று மாலை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீனவன் உணவகத்தின் எதிரே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆற்காடு சுரேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வந்த மாது லேசான வெட்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.