சேலம் அம்மா பேட்டையை சேர்ந்தவர் 61 வயதான மாதையன். இவருக்கு குப்பாயி என்ற மனைவியும் 31 வயதில் சாந்தகுமார் என்ற மகனும் உள்ளனர்.சாந்தகுமாருக்கு 31 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது.
மதுவிற்கு அடிமையான சாந்தகுமார் தினமும் குடித்துவிட்டு தாய் தந்தையிடம் சண்டை இடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலிலும் கோபத்திலும் இருந்துள்ளார் சாந்தகுமாரின் தந்தை மாதையன். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவும் சாந்தகுமார் குடித்துவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர் தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார். ஏற்கனவே மகனின் மீது கோபத்தில் இருந்த தந்தை இந்த சண்டையால் ஆத்திரமடைந்து உள்ளார். இரவு மனைவி தூங்கிய பின் வீட்டிற்கு வெளியில் இருந்த கல்லை எடுத்துக் கொண்டு மகனின் அறைக்கு சென்ற மாதையன். மகனின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு அந்த கல்லை மறுபடியும் எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல மீண்டும் தூங்கியுள்ளார்.
காலையில் எழுந்து மகனின் அறைக்கு சென்ற குப்பாயி ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து போதையில் இருந்ததால் கீழே விழுந்து அடிபட்டு இருக்கும் என நினைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சாந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் யாரோ அடித்ததில் தான் சாந்தகுமார் உயிரிழந்துள்ளார் என குப்பாயி இடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இதுகுறித்து போலீசில் புகாரளித்துள்ளார் குப்பாயி. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய அம்மாபேட்டை காவல்துறையினர். தந்தையே மகனை கொலை செய்ததை கண்டறிந்து மாதையனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தந்தையே மகனை கொன்றது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்