
திருவள்ளூர் மாவட்டம் விளங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் அசீனா. இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த (மே 28) தேதி இரவு திடீரென வலிப்பு வந்ததால் திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அசீனாவை அவரது தம்பி உசேன் அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தொடர்ந்து இரண்டு முறை வலிப்பு வந்ததால் மருத்துவர் அசீனாவிற்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்ததால் மயக்கத்தில் இருந்த அசீனாவை, அவரது தம்பி. ஒரு வார்டு பாய் மற்றும் செவிலியரின் உதவியோடு ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ஸ்கேன் எடுக்க பணம் கட்டுவதற்காக உசேன் பில் கவுண்டருக்கு சென்ற நிலையில் செவிலியரும் அசீனாவை வார்டு பாயிடம் விட்டு விட்டு மற்றொரு நோயாளியை கவனிக்க சென்றுள்ளார். இந்த சூழ்நிலையயை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வார்டு பாய் அசீனாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அசீனா மயக்கம் தெளிந்து கூச்சலிட்டு உள்ளார்.
அசீனாவின் சத்தத்தை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த உசேன் வார்டுபாயை பிடித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் வார்டு பாய் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மற்றும் பாதி சிகிச்சையிலேயே அசீனாவை டிஸ்சார்ஜ் செய்து வெளியில் அனுப்பியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த உசேன் மற்றும் அசீனா இது குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட சோழவரம் காவல் துறையினர். மருத்துவ சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழுதிகைமேடு பகுதியை சேர்ந்த வார்டு பாய் ராஜ்குமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்