திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான செல்லப்பா. இவருக்கு 44 வயதில் இசக்கிமுத்து என்ற மகனும் 38 வயதில் மகாராஜா என்ற மகனும் உள்ளனர். இசக்கிமுத்துவுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் மகாராஜாவிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மகாராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையானத்தில் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
எனவே மகாராஜாவின் குழந்தையையும் இசக்கிமுத்துவின் மனைவி வளர்த்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அதிகமான மகாராஜாவின் குடிப்பழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் அனைவருக்கும் தொல்லையாக இருந்துள்ளது. குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினரை வம்புக்கு இழுப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்வது ரோட்டில் செல்லும் சின்ன குழந்தைகளை அடிப்பது என குடித்திவிட்டு அட்ராசிட்டி செய்து வந்துள்ளார். பலமுறை தந்தை அறிவுரை கூறியும் குடிப்பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகாராஜா அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து கன்னத்தில் அடித்து மிரட்டியுள்ளார். இதில் சிறுவனுக்கு காதுகளில் இருந்து இரத்தம் வழிந்துள்ளது இதனால் கோபமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்லப்பாவின் விட்டு முன்பு கூடி “உங்கள் மகனை கண்டித்து வையுங்கள் இல்லையென்றால் போலீசில் புகாரளித்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த இசக்கிமுத்து மகாராஜையா கண்டித்து கொண்டு இருந்துள்ளார். ஆனால் நிதானத்தில் இல்லாத மகாராஜா இசக்கிமுத்துவிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். எனவே ஆத்திரமடைந்த இசக்கிமுத்து மற்றும் செல்லப்பா மகாராஜாவை வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகாராஜாவை மீது மருத்துவமனையில் இசக்கிமுத்துவின் மனைவி அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மகாராஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து செல்லப்பா மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் மற்றும் தந்தை சேர்ந்து தம்பியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.