அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 14 வயது பள்ளி மாணவனுக்கு தொடர்ந்து தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, காதலிப்பதாக கூறிய ஆசிரியை காசிடி கார்டருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, ஆசிரியையாக உள்ள காசிடி கார்ட்டர், மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே காவலில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு இரண்டு நாட்கள் தண்டனைச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
21 வயதான காசிடி கார்ட்டர், 2023-ஆம் ஆண்டு சவுத் டியர்போர்னில் செயல்படும் சவுத் டியர்போர்ன் நடுநிலைப் பள்ளியில் மாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, 14 வயது மாணவனுடன் ‘ஸ்னாப்சாட்’ செயலி மூலம் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கூறுகையில், காசிடி கார்ட்டர், மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அடிக்கடி அனுப்பியதுடன், குறிப்பாக இரவு நேரங்களில், அவனை காதலிப்பதாகவும், அவனுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாகவும் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாணவன் அளித்த வாக்குமூலத்தில், "ஆசிரியை குளிக்கும்போதெல்லாம் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்புவார். குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் அதிகமாக மெசேஜ் செய்வார்" என்று தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2023 டிசம்பரில் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவன், நடந்த சம்பவம் குறித்து பள்ளி பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்தார். பின்னர் அந்த அதிகாரி, பள்ளி முதல்வருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின்போது, மாணவனின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டதில், காசிடி கார்ட்டர் அனுப்பிய பல குறுஞ்செய்திகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, காசிடி கார்ட்டரின் செல்போனையும் சோதனை செய்த போலீசார், அதிலும் அதே புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை கண்டறிந்தனர். இந்த வழக்கில் முதலில் குழந்தையை தவறாக வழிநடத்துதல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவன் பின்னர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதுடன், நீதிமன்ற விசாரணையில் தொடர்ந்து பங்கேற்க விருப்பம் இல்லை என்று தெரிவித்ததால், அந்தக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை காசிடி கார்ட்டர் ஒப்புக்கொண்டதால், நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே உள்ள உறவை தவறாக பயன்படுத்தி, சமூக வலைதளங்கள் மூலம் சிறார்களிடம் ஒழுங்கற்ற முறையில் தொடர்பு கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது போன்ற குற்றங்களை தடுப்பதில் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகங்களும், மாணவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.