Abuse of Authority Abuse of Authority
க்ரைம்

"கைதியுடன் காருக்குள் உடலுறவு கொண்ட காவலர்!" அந்தரங்க உறுப்பு புகைப்படத்தை அனுப்பிய கொடூரம் - புகாரளிக்க வரும் பெண்களிடம் 'ஆபாச Message' அனுப்பி தொந்தரவு

அந்தப் பெண்ணைக் கைது செய்த நான்கு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அவர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்ததாகவும், இருவரும் அந்தக் காவலரின் காருக்குள் உடலுறவு

Vinvizhi Leninton

பதவியிழந்த நியூயார்க் நகர காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு குற்றவாளியுடன் உடலுறவு கொண்டதையும், அவருக்கு தனது அந்தரங்க புகைப்படத்தை அனுப்பியதையும், மேலும் பாதிக்கப்பட்டவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காவலரான 33 வயது மேத்யூ லாம்பர்ட், தனது பின்தொடரும் நடவடிக்கைகளுக்காக மூன்று அதிகாரப்பூர்வ முறைகேடு குற்றச்சாட்டுகளை கடந்த புதன்கிழமை ஒப்புக்கொண்டு, இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை விதிக்கப்பட்டபோது இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார் என்று மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த காவலர் “இது முடிந்ததும் கொண்டாட்ட பானங்கள் அருந்தலாமா?” என்று லம்பேர்ட், மார்ச் 19, 2024 அன்று ஒரு திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். “நீங்கள் இப்போது என்று சொன்னாலும், நான் உங்கள் வழக்கில் தொடர்ந்து கடுமையாக உழைப்பேன், உறுதியளிக்கிறேன்" என்று பாதிக்கப்பட்டவரிடம் பேசியுள்ளார்.

அந்த காவலர் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் அனுப்பிய எண்ணற்ற அருவருப்பான செய்திகளில் அதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. "இந்தக் குற்றவாளியின் சீர்குலைவு தரும் நடத்தை, ஒரு சட்ட அமலாக்க அதிகாரிக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு மிகவும் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், சில மணிநேரங்களுக்கு முன்பு தான் கைது செய்த ஒரு பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. "2014-ல் படையில் சேர்ந்த லம்பேர்ட், குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து டிசம்பரில் ராஜினாமா செய்தற் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையற்ற தொந்தரவு 2024 மார்ச் மாதம், திருட்டுக்கு ஆளான நபரிடமிருந்து தொடங்கியது. அதில், அந்த காவலர் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியில், தனக்கு ஏற்கனவே ஒரு உறவு இருப்பதாகவும், ஆனாலும் அவர் மீது இன்னும் ஆர்வம் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டிருந்தார். மேலும், "நான் கேட்டது உங்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தால் மன்னிக்கவும்," என்றும் அவர் எழுதினார். "நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மிகவும் அருமையாகவும் தெரிகிறீர்கள்... மேலும் நான் சொன்னது போல், இதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எப்போதும் தொழில்முறையாகவே நடந்துகொள்வேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வலிந்து பேசியுள்ளார். இரண்டு மாதங்களாக லம்பேர்ட் தொடர்ந்து தொடர்பு கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுக்க வேண்டிய கட்டாயம் (Block) ஏற்பட்டது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஒரு குற்றவியல் புகாரின்படி, அந்த முன்னாள் காவலர், தனது வழக்குகளில் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண்ணை, மார்ச் 28, 2024 முதல் மே 14, 2024 வரை குறுஞ்செய்திகள் மூலம் துன்புறுத்தியுள்ளார். அதில் அவர் "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்," என்று அந்த காவலர் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். "உங்களைச் சந்தித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். நான் உங்களையோ உங்கள் உறவையோ அவமதிக்கும் நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இது சாத்தியம் என்றால், நான் இதை மரியாதையான முறையில்தான் சொல்கிறேன்" என்று நல்லவர் போல் பேசியுள்ளார். பின்னர், 2024, மே 20 அன்று, லம்பேர்ட் மற்றொரு பெண்ணை சிறு திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜராகும் அழைப்பாணையின் பேரில் அந்த பெண்ணை "ஒருவேளை" விடுவிக்க முடியும் என்று கூறினார். அவர் கூறியது மட்டுமின்றி சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி அந்த பெண்ணை விடுவிக்கவும் செய்தார்.

"நீங்கள் விரும்பினால் நான் வந்து உங்களைச் சந்திக்கிறேன்," என்று அந்த பெண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினார். "அது உங்கள் விருப்பம். நான் வர வேண்டுமா? என்பதை நீங்களே சொல்லுங்கள்." "என்னால் அதிகமாக குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. கொஞ்சம் வேலையாக இருக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். "வீட்டிற்குச் செல்லும் வழியில் நான் வந்து பார்க்க வேண்டுமானால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஒரு சின்ன வணக்கம் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று அந்த பெண்ணிற்கு அனுப்பினார்.

அதன்பிறகு லம்பேர்ட், அந்தப் பெண்ணுக்குத் தனது அந்தரங்க உறுப்புகளின் ஆபாசப் படங்களைக் குறுஞ்செய்தியாக அனுப்பினார். பின்னர் கடந்த மே 21 அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பிறகு அவர் அந்தப் பெண்ணைக் கைது செய்த நான்கு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அவர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்ததாகவும், இருவரும் அந்தக் காவலரின் காருக்குள் உடலுறவு கொண்டதாகவும் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது. இந்த சந்திப்பிற்கு அடுத்து, “நீ மிகவும் அருமையானவள்,” என்று அவன் பின்னர் அந்த பெண்ணுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.