"இன்ஸ்டா காதலால் நடந்த விபரீதம்.." அண்ணனின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த 19 வயது இளம்பெண்!

இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Instagram Relationship
Instagram RelationshipInstagram Relationship
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகா, தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி (19). இவர் கடந்த மூன்று வருடங்களாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. அப்போது அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இக்காதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். வீட்டில் உள்ளோரின் எதிர்ப்பால் மனமுடைந்த அபிசெல்வி, இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் தடுத்த போதிலும், அபிசெல்வி தொடர்ந்து சேலத்தைச் சேர்ந்த அந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த ஜூன் 09ம் அவர் இன்ஸ்டாவில் தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்ததை அவரது அண்ணன் சிவஞானம் நேரில் பார்த்துக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அண்ணன் சிவஞானம் தங்கை அபிசெல்வியை அடித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்த அபிசெல்வி, தனது வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடுமையான மன உளைச்சலில் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த சீலிங் பேனில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com