Gang rape accused who got "heroic welcome" 
க்ரைம்

கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லையா ..? “ரோடு ஷோ” நடத்திய பாலியல் குற்றவாளிகள்..! கொதித்தெழுந்த கர்நாடக மக்கள்..

2 வயது குழந்தை முதற்கொண்டு 7 பேரை கொன்ற கொலைக்குற்றவாளிகள் ‘நன்னடத்தை’ காரணமாக வெளியில் வந்தபோது அவர்களையும் ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கி வரவேற்ற சம்பவத்தை தொடர்ந்து..

Saleth stephi graph

கர்நாடகா; இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆளில்லா இடத்தில வீசிச்சென்ற 7 நபர்கள் ஜாமீனில் வெளியே வந்து ரோடு ஷோ நடத்திய சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஹோட்டலில் தன் காதலனோடு தங்கியிருந்த பெண்ணை அருகில் இருந்த 7 நபர்கள் அப்பெண்ணின் காதலனை தாக்கி அந்த பெண்ணை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து ஹாவேரி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை கண்டுகொள்ளாமல் காவலர்கள் அலட்சியம் செய்துள்ளனர். தொடர்ந்து அப்பெண் தனது நீதிக்காக கோர்ட் வாசலை மிதித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 7 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு, ஹாவேரி செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் பிணை வழங்கியது. இந்நிலையில், பிணையில் வெளியானவர்களை 20 -க்கும் மேற்பட்டோர் ஐந்து கார்கள், பைக்குகள் மூலம் ஊர்வலமாக அழைத்துச் சென்று உள்ளனர். மேலும் இந்த பாலியல் குற்றவாளிகளின்  வருகையை ஏதோ சாதனை போல “Come Back” துன்ற கேப்ஷன் உடன் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.ஹாவேரி துணைச் சிறைச்சாலையிலிருந்து சுமார் 25 கி.மீ தூரம் வரை இந்த வாகன பேரணி தொடர்ந்துள்ளது. 

இதனை பார்த்து அதிர்ந்த மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் இதனை தொடர்ந்து இந்த கயவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.அஃப்தாப் சந்தனகட்டி, மதார் சாப் மண்டக்கி, சாமிவுல்லா லலனாவர், முகமது சாதிக் அகாசிமானி, ஷோயிப் முல்லா, தௌசிப் சோட்டி மற்றும் ரியாஸ் சாவிகேரி ஆகிய குற்றவாளிகள் கொஞ்சம் கூட குற்ற உணர்வின்றி இந்த வரவேற்பை ஏற்று சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கிலும் இதே..

குஜராத் கலவரம் -2002 பில்கிஸ் பானு என்ற பெண்ணை கற்பழித்து 2 வயது குழந்தை முதற்கொண்டு 7 பேரை கொன்ற கொலைக்குற்றவாளிகள் ‘நன்னடத்தை’ காரணமாக வெளியில் வந்தபோது அவர்களையும் ஆரத்தி எடுத்து, இனிப்பு வழங்கி வரவேற்ற சம்பவத்தை தொடர்ந்து இப்படி ஒரு அவலம் நிகழ்ந்துள்ளது.

எந்த தேசத்தில் ‘பெண்களை தேவியராக கடவுளாக பூஜிக்கின்றனரோ அதே தேசத்தில்தான் பெண்களின்மீது அளவற்ற வன்கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன, ஏற்கனவே நம் சமூகம் நீதி மறுக்கப்பட்ட சமூகமாக இருக்கிறது, இதில் பாதிப்புக்குள்ளானவர்களின் கண்ணியமும் மனத்துயரும் ஒரு பொருட்டாகவே இல்லை என்பதே இது காட்டுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்