munna  
க்ரைம்

இரண்டு மனைவி 18 குழந்தை பத்தாம.. கள்ளக்காதல் வேற” - காதலியால் அடித்து கொல்லப்பட்ட பஞ்சாயத்து தலைவர்… சாக்கடையில் மிதந்த அழுகிய உடல்!

சுமன் தேவி மற்றும் அவரது சகோதரர் முன்னாவை கட்டையால் அடித்து கொலை செய்திருக்கின்றனர்...

Mahalakshmi Somasundaram

உத்திர பிரதேச மாநிலம், அமிர்பூர் மாவட்டம் பகுதியில் உள்ள சுமேர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னா. இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த நிலையில் இவருக்கு நிஷா மற்றும் பனோ என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் ஒரு மனைவிக்கு தல ஒன்பது குழந்தை என இரண்டு மனைவிகளுக்கு 18 குழந்தைகள் உள்ள நிலையில் இருவருடனும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் முன்னாவிற்கு அதே பகுதியில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வரும் சுமன் தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் முன்னா தனது குடும்பத்தை கவனிக்காமல் சுமன் தேவியுடன் அவரது வீட்டில் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார். இதனை அறிந்த சுமன் தேவியின் குடும்பத்தினர் முன்னவுடனான பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்திருக்கின்றனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் முன்னாவிற்கும் சுமன் தேவிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் தேவி முன்னாவுடன் பழக மறுப்பு தெரிவித்த நிலையில் முன்னா தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார். எனவே இது குறித்து சுமன் தேவி அவரது சகோதரிடம் தெரிவித்த நிலையில் இருவரும் சேர்ந்து முன்னாவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி (மார்ச் 18) ஆம் தேதி முன்னாவுக்கு போன் செய்த சுமன் தேவி “நான் எங்க அம்மா வீட்ல இருக்கேன் நீ வாங்க” என கூறியுள்ளார். எனவே முன்னாவும் தேவி வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு மறைந்து இருந்த சுமன் தேவி மற்றும் அவரது சகோதரர் முன்னாவை கட்டையால் அடித்து கொலை செய்திருக்கின்றனர்.

பின்னர் கொலையை மறைக்க நினைத்து முன்னாவின் சடலத்தை சாக்குப்பையில் கட்டி அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து கணவரை காணவில்லை என நிஷா அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் முன்னாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் படி சுமன் தேவியிடம் விசாரணை மேற்கோள் போது அவர் தனது சகோதரருடன் சேர்ந்து முன்னாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் முன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கள்ளக் காதலி தனது சகோதரருடன் சேர்ந்து காதலனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.