கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் 30 வயதுடைய தமிழரசன். டிராக்டர் டிரைவரான இவருக்கும் மத்தூர் அருகே உள்ள கூச்சூரை சேர்ந்த சத்யவாணி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் தமிழரசனின் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக வசித்து வந்தனர். தந்தை ராஜன் மரம் அறுக்கும் வேலைக்கும், தாய் லட்சுமி ஓட்டலில் கூலி வேலைக்கும் சென்று வந்தனர். தினமும் காலை வேலைக்கு செல்லும் தமிழரசன் இரவு தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது.
ஆனால் ராஜன் மரம் அறுக்கும் தொழிலாளி என்பதால் காலை வேளைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவர் என சொல்லப்படுகிறது. எனவே வீட்டில் மருமகளுடன் நெருங்கி பழகி வந்த ராஜனுக்கும், அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தினமும் மதியத்திற்கு மேல் அவர்கள் தமிழரசன் வீடு திரும்பும் வரையில் தங்களின் திருமணத்திற்கு மீறிய உறவை தொடர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் கர்ப்பமான சத்யவாணிக்கு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் அடுத்த 2 மாதத்தில் சத்யவாணி மீண்டும் கர்ப்பமாக தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஏற்கனவே தனது மனைவிக்கும், தந்தைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், அவர்கள் தான் இல்லாத நேரத்தில் எல்லை மீறி போகிறார்களே என்ற சந்தேகம் தமிழரசனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் சத்யவாணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சத்யவாணி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு ஒரு வாரம் இருந்து விட்டு கடந்த (மார்ச் 17) ஆம் தேதி மாலை உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கணவன் வீடு திரும்பினார். அடுத்த நாள் (மார்ச் 18) ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமனார் ராஜன், மருமகளை வழக்கம் போல உல்லாசமாக இருக்க அழைத்ததாக சொல்லப்படுகிறது . அப்போது குழந்தை அழவே குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் போட்ட சத்யவாணி பாத்ரூமுக்கு சென்றார். அந்த நேரம் அங்கிருந்த ராஜன் இந்த குழந்தை பிறந்தது முதல் நமக்கு பிரச்சினையாக இருக்கிறதே என்றும் உல்லாச வாழ்க்கைக்கும் தொந்தரவு செய்கிறது என்றும் நினைத்து ராஜன் குழந்தையின் மூக்கை பிடித்து அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதனிடையே பாத்ரூமில் இருந்து வந்த சத்யவாணி குழந்தை தலை தொங்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் மருத்துவமனைக்கு செல்ல நினைத்த சத்யவானி குழந்தை தலை தொங்கி இறந்துவிட்டதை உறுதி செய்து என்ன செய்வது என தெரியாமல் இருந்திருக்கிறார். பின்னர் குழந்தை இறந்துவிட்டது என தெரிந்தால் கணவர் என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் குழந்தையின் உடலை தூக்கி சென்று அருகில் உள்ள சேட்டு என்பவரின் கிணற்றில் போட்டு விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதனிடையே வீட்டிற்கு வந்த குழந்தையின் தந்தை தமிழரசன் குழந்தை எங்கே என கேட்க, எதுவும் நடக்காதது போல் சத்யவாணி தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதே போல தந்தை ராஜனுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்க அவரும் தனக்கு தெரியாத என கூறி நாடகம் ஆடியுள்ளார். இதையடுத்து குழந்தையை தமிழரசன் தேடி வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கிணற்றில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனஹள்ளி போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் முதற் கட்டமாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தையை மாமனாரான ராஜன் கையால் அழுத்தி கொலை செய்ததும், பின்னர் மருமகள் தெரியாமல் இறந்த குழந்தையை அருகில் இருந்த கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து சத்யவாணி, அவரது மாமனார் ராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாமனாருடன் ஏற்பட்ட விபரீத உறவால் 5 மாத குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.