Admin
க்ரைம்

மின் இணைப்பு கேட்ட பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த அரசு அதிகாரி… தொடர்ந்து போன் மூலம் பாலியல் டார்ச்சர் செய்த கொடூரம்!

ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை தாருங்கள் மனு பற்றி தகவல் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடம் அருகே திருப்பதிச்சாரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் அந்த பெண் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வக்பு வாரியத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் இடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் சிறிய வீடு கட்டி இருக்கிறார். பின்னர் வீட்டுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு அந்த பகுதிக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட மின் வாரிய அதிகாரியான பீமநகரி பகுதியை சேர்ந்த தாணு மூர்த்தி என்பவர் அந்த பெண்ணிடம் சில விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளீர்கள் இதில் கட்டிய வீடு என்பதால் மின் இணைப்பு கொடுப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறி இருக்கிறார். தொடர்ந்து மனுவை பரிசீலனை செய்து தகவல் சொல்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார். நீண்ட நாட்களை கடந்த போதிலும் அதிகாரியிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லாத நிலையில் மனுவின் நிலையை அறிய அந்த பெண் மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ஏதேதோ காரணங்களை கூறி பெண்ணை அலைக்கழித்த அதிகாரி ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை தாருங்கள் மனு பற்றி தகவல் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அந்தப் பெண், மின் வாரிய அதிகாரியிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அதிகாரி அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது “மின் இணைப்பு கொடுப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது, இருப்பினும் நான் கவனித்து கொள்கிறேன். உங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். இது உனக்காக தனிப்பட்ட முறையில் சிறப்பு கவனம் எடுத்து நான் செய்து தருகிறேன்’ என்று கூறி அடிக்கடி போனில் பேச தொடங்கி உள்ளார்.

மேலும் பெண்ணிடம் ‘நான் உனக்கு மின்சார இணைப்பு தரேன் ஆனா அதுக்கு கைமாறாக நீ என் கூட தனிமையில் இருக்கனும் வேளையில் அதிகாரிகள் பிரஷர் கொடுக்குறாங்க அதனால் தான் கேட்கிறேன். எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கனும் நாம் எங்கு ஜாலியாக இருக்க வேண்டும் என்ற இடத்தை நீ செய்து சொல்’ என பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளுக்களிடம் புகார் அளித்த நிலையில் இதை அறிந்த மின்வாரிய அதிகாரி தலைமறைவாகி உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்