மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு, மனைவி தனது கணவர் மீது ஆத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு, சிறிதாக தொடங்கிய குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதில், கணவரின் பிறப்புறுப்புகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சண்டையை தடுக்க தலையிட முயன்ற அவரது மாமனாருக்கும் லேசான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்து, பிஎன்எஸ் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அப்பெண் மீது போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் வீட்டில் கணவர், மனைவி மற்றும் கணவரின் தந்தை மட்டுமே இருந்துள்ளனர். அந்தத் தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை, இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதுமுண்டு. காயமடைந்தவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சனிக்கிழமை இரவும் அவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்திற்காக தகராறு ஏற்பட்டுள்ளது, என்று டாப்ரா நகர காவல் நிலையப் பொறுப்பாளர் சஞ்சய் சர்மா தெரிவித்துள்ளார்.
சண்டை முற்றியதால் கணவன் ஆத்திரத்தில் அவரது மனைவியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் கடும்கோபத்திற்கு ஆளான அவரது மனைவி நேராக சமையலறைக்குள் சென்று தன் கணவன் மீது கொதிக்கும் நீரை ஆத்திரத்தில் ஊற்றியுள்ளார். இதை தடுக்க அருகில் வந்த அந்த பெண்ணின் மாமனாரும் சிறு காயங்களுடன் தப்பினார். அந்த தண்ணீரை பருப்பு தயாரிப்பதற்காகத் தண்ணீரைக் கொதிக்க வைத்திருந்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட கணவன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்குப் பிறகு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துக்கொண்டு அவரது மனைவி தப்பிச் சென்றுவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.