Gaana singers killed Gaana singers killed
க்ரைம்

"கானா பாடகர்கள் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை!" முன் விரோதம்தான் காரணமா? 'போலீசார் தீவிர விசாரணை'

கானா பாடகர்கள் மணிமங்கலம் அருகே இருவரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vinvizhi Leninton

கானா பாடகர்கள் கானா பாடகர்கள் மணிமங்கலம் அருகே இருவரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மணிமங்கலம் அருகே கானாப் பாடல்கள் பாடி வரும் இருவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியை அடுத்த அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரத் (25), சீனு (24). இருவரும் இசைக் கச்சேரியில் கானா பாடல்கள் பாடி வரும் வேலையை செய்து வருகின்றனர். 17ம் தேதி மாலை வேளையில் படப்பை அருகே இசைக் கச்சேரி ஒன்றில் கானா பாடல்கள் பாடிவிட்டு இரவு மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள தனது நண்பர் லோகேஷ் என்பவர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

இரவு முழுவதும் 3 பேரும் கானா பாடல்கள் இசைத்தும், பாடியும் மகிழ்ந்து இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வேளையில் லோகேஷ் வீட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு மர்ம நபர்கள் முதலில் லோகேஷை தாக்க முயன்றுள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து லோகேஷ் தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்த பரத், சீனு ஆகிய இருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பரத் வீட்டின் உள்ளேயும் சீனு வீட்டு வாசலிலும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வீடு புகுந்து கொலை செய்த மர்ம நபர்கள் யார்?, இவர்கள் கொலை செய்யப்பட என்ன காரணம்?, முன்விரோதமா?, தொழில் போட்டியா?, லோகேஷ் வீட்டில் இந்த சம்பவம் நடந்ததால் லோகேஷின் முன்விரோதமா? என்பது குறித்து விசாரணை போலீசார் தரப்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மர்ம நபர்கள் 6 பேர் இருவரை சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.