"நேரில் வா பேசிக்கலாம்" - காதலியின் முகத்தை கற்களால் சிதைத்த காதலன்! திருமண பேச்சால் நடந்த விபரீதம்..

நேரில் பேசுவதற்கு அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த காதலியிடம் நீண்ட
trichy crime case
Published on
Updated on
1 min read

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி முகத்தை கொடூரமாக தாக்கிய இளைஞர் வீடியோ வைரல் - மாணவியை தாக்கிய இளைஞரை சுற்றி வளைத்த பொதுமக்கள் கேகே நகர் போலீசாரிடம் ஒப்படைப்பு. 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அந்த இளைஞர் தில்லை நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அந்த இளைஞரை காதலித்து வந்த கல்லூரி மாணவி காஜாமலையில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டம் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தனது காதலனிடம் கூறியுள்ளார் மாணவி. அதற்கு இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம், “எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம்” என தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

காதலியை சந்திக்க வந்த இளைஞர், நான் சொல்லும் இடத்திற்கு வருமாறு சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் நேரில் பேசுவதற்கு அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த காதலியிடம் நீண்ட நேரமாக பேசியுள்ளர். இவர்கள் காதல் குறித்தும், வீட்டின் எதிர்ப்பு குறித்தும் பேசி உள்ளார்கள். இதில் தனது பேச்சுக்கு உடன்படாத மாணவியை ஆத்திரமடைந்த காதலன் கொடூரமாக அடித்துள்ளார். தாக்கியதில் கீழே வீழ்ந்த காதலியை, அருகில் இருந்த கல்லை கொண்டு முகத்தில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த சக பொதுமக்கள் அந்த இளைஞரை தடுத்து  மாணவியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவியை தாக்கிய அந்த இளைஞரை விரட்டி பிடித்து, அடித்து கைகளை கட்டி போட்டுள்ளனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் இளைஞரை கைது செய்து, இந்த சம்பவம் குறித்து கே கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com