POCSO case Tamil Nadu 
க்ரைம்

"தாய் - தந்தையை இழந்த 15 வயது சிறுமி.." காதலன் தொடங்கி ஆம்புலன்ஸ் டிரைவர் வரை - ஆசை வார்த்தை கூறி சீரழித்த 4 கொடூரர்கள்!

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

Vinvizhi Leninton

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தாய் - தந்தையை இழந்த நிலையில் தாத்தா - பாட்டி வளர்ப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல்போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா தனது பேத்தியை காணவில்லை என எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்துள்ளனர்.

இறுதியாக போலீசார் பத்து நாட்களுக்கு பிறகு சிறுமியை கண்டறிந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் சிறுமிக்கு குரும்பல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விமல்ராஜ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய விமல்ராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர் பாலியல் வன்கொடுமையின் காரணமாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு வார்டு பாயாக பணி புரிந்த திருத்துறைப்பூண்டியை சேர்ந்த முத்துக்குமரன் (39) என்ற இளைஞருடனும் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி சிறுமியிடம் அவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். பின்னர், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவாக பணிபுரிந்த விஜய் என்பவர் விவரங்களை அறிந்து உதவி செய்வதாக கூறி சிறுமியிடம் ஆதரவாக பேசியுள்ளார். பின்னர், இவரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த விவரங்களை எல்லாம் அறிந்த திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்த சங்கரய்யா (24) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்து சென்று பல முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது குறித்த விஷயங்களை அறிந்த எடையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜ், முத்துக்குமரன், சங்கரய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான ஆம்புலன்ஸ் டிரைவர் விஜய்யை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து 4 பேர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.