Karnataka wife murder case Karnataka wife murder case
க்ரைம்

"கள்ளக்காதலை விடவில்லை என்றால்.." மிரட்டிய மனைவி! கொலை செய்து விபத்து என நாடகமாடியது அம்பலம் 'பக்கா ஸ்கெட்ச்' போட்டும் கணவன் சிக்கியது எப்படி?

இந்த கள்ளஉறவின் காரணமாக தம்பதியினரிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

கர்நாடக மாநிலம் பெலகாவி, கோகாக் தாலுக்காவின் ஷிந்திகுர்பேட்டை கிராமத்தில், தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, அதனை ஒரு சாலை விபத்தாகக் காட்ட முயன்றதாகக் கூறப்படும் 33 வயது நபரை, குடும்ப வன்முறை தொடர்பான அதிர்ச்சிகரமான வழக்கில் கோகாக் ஊரக போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தோஷ் படாய்ட் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறை வட்டாரங்களின்படி, சந்தோஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக கிராம பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி, 32 வயதான சகுபாய் படாய்ட், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த கள்ள உறவு குறித்து அறிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கள்ளஉறவின் காரணமாக தம்பதியினரிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த உறவை முறித்துக்கொள்ளுமாறு சகுபாய் தனது கணவரை எச்சரித்ததோடு, குடும்பத்தினரிடம் இதுகுறித்துத் தெரிவிப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தில் பதற்றம் அதிகரித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. விசாரணையில், ஜூன் 12, வெள்ளிக்கிழமை அன்று, சந்தோஷ் தனது மனைவியைக் கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அவர் ஒரு குளிர்பானத்தில் விஷம் கலந்துள்ளார். மேலும், மனைவி சகுபாயை அதைக் குடிக்க வற்புறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குளிர்பானத்தை குடித்த சகுபாய் சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார். அதன் பின்னர் ​​சந்தோஷ் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். குற்றத்தை மறைப்பதற்காக, சந்தோஷ் அவரது மனைவியின் உடல் மீது இருசக்கர வாகனத்தால் விபத்து நடந்தது போன்று, ஒரு போலி விபத்தை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அன்றிரவு, அவர் 112 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு, சாலை வைப்பது நடந்தது போன்று நாடகமாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர் கோகாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், தார்வாட் தாலுக்காவின் தல்லூர் பகுதியைச் சேர்ந்த, பாதிக்கப்பட்டவரின் தாயாரான உத்தவ்வா கோட்ஜேரி எழுப்பிய சந்தேகத்தின் காரணமாக, முறைப்படியான புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், காவல்துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கினர். காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபுவின் வழிகாட்டுதலின் கீழ், உதவி ஆய்வாளர் கே.பி. வாலிகர் மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடம், மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தில் உள்ள முரண்பாடுகளும், தடயவியல் கண்டுபிடிப்புகளும், இச்சம்பவத்தை ஒரு கொலை வழக்கு என்பதை அம்பலப்படுத்தின. அதனைத் தொடர்ந்து, சந்தோஷ் படாய்ட் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.