husband killed her wife using gun news in tamil 
க்ரைம்

“விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி” - ஆத்திரமடைந்த கணவன் செய்த செயல்… நள்ளிரவில் கேட்ட துப்பாக்கி சத்தம்!

அப்போது அலுவலக பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேஷ்வரியை பின் தொடர்ந்து அவரிடம்....

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 40 வயதுடைய பாலமுருகன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயதுடைய மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியேறியுள்ளனர். பாலமுருகன் அதே பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் மகேஸ்வரி தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்

இந்நிலையில் கணவன் பாலமுருகன் மனைவி மகேஸ்வரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விரக்தியடைந்த மகேஸ்வரி கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களுருவில் உள்ள ராஜாஜி நகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இதனை தொடர்ந்து சட்ட ரீதியாக கணவனை பிரிந்து வாழ முடிவு செய்த மகேஸ்வரி விவாகரத்து கேட்டு பாலமுருகனுக்கு கோர்ட்டு மூலம் கடந்த வாரம் நோட்டீஸ் விடுத்திருக்கிறார். விவாகரத்து நோட்டீஸ் பார்த்து ஆத்திரமடைந்த பாலமுருகன் அந்த நோட்டீஸில் இருந்த முகவரியை பார்த்து மகேஸ்வரி வசிக்கு வீட்டை அறிந்த கணவர் பாலமுருகன் நேரடியாக அப்பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அலுவலக பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேஷ்வரியை பின் தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அதனை கண்டுகொள்ளாமல் மகேஸ்வரி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் அவரை இடைமறித்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மகேஸ்வரியை சரமாரியாக சுட்டு இருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மகேஷ்வரியை மீட்ட அப்பகுதியினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பாலமுருகன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்