jagathish  
க்ரைம்

“மனைவியை கொன்று சடலத்துடன் ஒரே கட்டிலில் கணவன் செய்த..” - வீடு முழுவதும் வீசிய துர்நாற்றம்… இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்!

ஜெகதீஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இரத்தம் உறைந்த நிலையில் ரீமாபாய் கட்டிலில் சடலமாக...

Mahalakshmi Somasundaram

மத்தியபிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயதுடைய ஜெகதீஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் ஜெகதீஷ் தனது மாணவியின் சகோதரியான 25 வயதுடைய ரீமாபாய் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனால் கோபமடைந்த முதல் மனைவி கணவனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். தற்போது ரீமாபாய் ஜெகதீஷ் தம்பதிக்கு நான்கு மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவன் அதே பகுதியில் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. ரீமாபாய் சரியான நேரத்திற்கு சமைக்காமல் குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே ஜெகதீஷ் தந்தை இருவரையும் சமாதானப்படுத்தி அறிவுரை கூறி வாழ வைத்திருக்கிறார்.

அண்ணல் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜெகதிஷ் மனைவியை சரமாரியாக கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் சடலத்தை எடுத்து கட்டிலில் உறங்குவது போல போட்டு இரண்டு குழந்தைகளையும் பக்கத்துக்கு அறையில் உறங்க வைத்துவிட்டு அவரும் அதே கட்டிலில் மனைவியின் சடலத்திற்கு அருகில் உறங்கியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஜெகதீஷின் தந்தை சென்று வீட்டின் கதவை தட்டிய போது கதவை திறந்த ஜெகதீஷ் அவரை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது இதனால் சந்தேகமடைந்த முதியவர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் ஜெகதீஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இரத்தம் உறைந்த நிலையில் ரீமாபாய் கட்டிலில் சடலமாக கிடந்துள்ளார்.

எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வாய்த்த நிலையில் ஜெகதீஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மனைவியை கொலை செய்ததையும் சடலத்துடன் இரண்டு நாட்கள் வீட்டிற்குள் இருந்ததையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் அஜார்ப்[படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கணவன் மனைவியை கொன்று இரண்டு நாட்கள் சடலத்துடன் வீட்டில் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.