தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் 36 வயதான கொம்பையன். இவருக்கு திருமணமாகி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும் 14 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் கொம்பையன் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அதே வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் 26 வயதான முருகேசன் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் கொம்பையன் மற்றும் முருகேசன் நட்பாக பழகி வந்துள்ளனர். நெருக்கமான நண்பர்கள் இல்லையென்றாலும் பார்க்கும் போது பேசிக்கொள்வது ஊரின் பொதுவான செயல்களில் இணைத்து செயல்படுவது. இருவரும் சேர்ந்து வெளியில் செல்வது என இவர்களது பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கொம்பையானுக்கு தனது மனைவிக்கும் முருகேசனுக்கும் இருந்த தகாத உறவை பற்றி தெரியவந்துள்ளது. ஒரே ஊரை சேர்ந்தவர் என்பதாலும் வெளியில் தெரிந்த சரி வராது என்றும் நினைத்த கொம்பையன் முருகேசனை தனிமையில் அழைத்து அறிவுரை கூறியுள்ளார். அதற்கு முருகேசன் “நீ என்ன உன் பொண்டாட்டி கூட வழ்ந்துட்டா இருக்க, அவ எப்படி இருந்தா உனக்கு என்ன” என நக்கலாக பதிலளித்துள்ளார்.
இருப்பினும் பொறுமையாக இருந்த கொம்பையன் முருகேசனுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் முருகேசன் மீனாவுடன் இருந்த உறவை கைவிடாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. பலமுறை சொல்லியும் முருகேசன் மாறாமல் இருந்தது கொம்பையனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் நேற்று முருகேசன் மீனா வீட்டில் இருந்து வெளியில் வருவதை பார்த்த கொம்பையன் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார்.
எனவே நேற்று இரவு டாஸ்மாக்கிற்கு வந்த முருகேசனை கொம்பையன் கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளார். கொம்பையானை பார்த்ததும் முருகேசன் தன்னை காப்பாற்ற சொல்லி டாஸ்மாக் கடைக்குள் ஓடியுள்ளார். விடாமல் விரட்டி சென்று கொம்பையன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். கையில் அரிவாள் வைத்திருந்ததால் யாரும் கொம்பையனுக்கு அருகில் செல்லாமல் இருந்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அருகில் இருந்த கொம்பையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்கில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.