latchumana and daughter geetha  
க்ரைம்

“கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி” - பார்க்க கூடாததை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்.. மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை!

திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி லட்சுமண வீட்டில் இல்லாத போது உல்லாசத்தில் இருந்து வந்திருக்கின்றனர்...

Mahalakshmi Somasundaram

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கல்யாணம் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திர பிரசாத் சர்மா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆம் தேதி அதே நேபாளத்தைச் சேர்ந்த 40 வயதுடைய லட்சுமண பிரசாத் என்பவரை காவலாளியாக வேலைக்கு சேர்த்து விடுகிறார். லட்சுமண பிரசாத் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அதே பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலாளி அறையில் தங்கி வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது மனைவியும் இரண்டாவது வது மகளும் நேபாளத்திற்கு சென்றிருக்கின்றனர்.

எனவே லட்சுமண பிரசாத் தனது மூத்த மகளான 9 வயதுடைய கீதா உடன் பள்ளியில் தங்கி இருந்தார். . கீதா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று பள்ளியின் ஓட்டுநர் அஸ்வின் என்பவர் பள்ளி வாகனத்தை எடுக்க சென்ற போது காவலாளி லட்சுமண பிரசாத் மகள் பள்ளியின் இரண்டாவது மடியில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து பள்ளயில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் சென்று பார்த்த போது லட்சுமண பிரசாத் கயிறு அறுந்து கீழே விழுந்து மயங்கி கிடந்ததாகவும் அவரது மகள் கீதா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய லட்சுமண பிரசாத்தை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், லட்சுமண பிரசாத் தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் லட்சுமண பிரசாந்த் மனைவியை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சமண பிரசாந்த் பள்ளியில் வேலைக்கு சேரும் முன்பு நுங்கம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீடு எடுத்து தங்கி ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவி சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் சமையல் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சுமிதாவிற்கும் அவரது வீட்டிற்கு தண்ணி கேன் போட வரும் சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி லட்சுமண வீட்டில் இல்லாத போது உல்லாசத்தில் இருந்து வந்திருக்கின்றனர். வழக்கம் போல சுமிதா மற்றும் சந்தீப் உல்லாசத்தில் இருக்கும் போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு சென்ற லட்சுமண பிரசாந்த் அவரது மனைவியை பார்க்க கூடாத இலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் பலமுறை குறியும் சுமிதா அவரது கள்ள தொடர்பை கைவிடாமல் இருந்திருக்கிறார். மேலும் இரண்டாவது மகளை அழைத்து கொண்டு பீகாருக்கு சென்ற நிலையில் ஆத்திரமடைந்த லட்சுமண பிரசாந்த் மனைவி சுமிதாவுக்கு வீடியோ கால் செய்து முத்த மகள் கீதாவை கொன்று தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கணவன் மகளை கொன்று தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.