கோவை மாவட்டம், அன்னூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 41 வயதுடைய அன்பு மலர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முருகானந்தம் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படும் நிலையில் அன்பு மலர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அன்னூர் கூத்தாண்டவர் கோவில் வீதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
பிரிந்து வாழ்ந்து வந்த நிலையிலும் முருகானந்தம் அவ்வப்போது அன்பு மலர் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அன்பு மலர் வீட்டிற்கு அவரது உறவினரான 32 வயதுடைய மோகன் குமார் என்பவர் அடிக்கடி வந்து சென்ற நிலையில் அவருடன் அன்பு மலருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே மோகன் குமார் அடிக்கடி அன்பு மலர் வீட்டிற்கு சென்று அவருடன் தலைமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த முருகானந்தம் தனது மனைவி அன்பு மலரை கண்டித்த நிலையில் தொடர்ந்து ஒரு வருடமாக மோகன் குமாருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல முருகானந்தம் அவரது மனைவி அன்பு மலரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டிற்குள் அன்பு மலரும், மோகன் குமாரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த முருகானந்தம் கடும் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அன்பு மலர் மற்றும் மோகன் குமார் ஆகிய இருவரையும் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகானந்தத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து முன்னாள் மனைவியையும், அவருடன் இருந்த நபரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் அன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.