பீகார் மாநிலம், பெகுசராய் மாவட்டம் ரகுநந்தன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தன் குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமன் குமாரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுமன் குமாரியை விட சந்தன் குமார் வயதில் மூத்தவர் என சொல்லப்படும் நிலையில் தொடக்கத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது ஆனால் பின்னர் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த (பிப் 01) ஆம் தேதி சந்தன் குமாரின் உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த பூஜைக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு சடங்குகளை முடித்துவிட்டு இருவரும் புறப்பட்ட சிறிது நேரத்தில் சந்தன் குமார் காவல் நிலையத்திற்கு போன் செய்து “அதுபூரில் உள்ள காட்டுப்பகுதியில் எனது மனைவியை கொன்னுட்டாங்க” என தெரிவித்தார். இதை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்து கிடந்த சுமன் குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்ததில் கொலை நடந்த நேரத்தில் கணவன் மனைவியை தவிர வேறு எந்த நபர்களும் அப்பகுதிக்கு செல்லாத நிலையில் சந்தன் குமார் மீது சந்தேகமடைந்த போலீசார் சந்தன் குமாரை பிடித்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமன் குமாரி சமூக வலைத்தளங்கள் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சுமன் குமாரிக்கு திருமணத்திற்கு மீறிய பழக்கம் ஏற்பட்டு பலமுறை தனிமையில் இருந்திருக்கின்றனர்.
உறவினர் மூலம் மனைவியின் தகாத உறவை அறிந்த சந்தன் குமாருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சுமன் குமரியை கொலை செய்ய திட்டம் தீட்டி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வாங்கி பதுக்கி வைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து உறவினர் வீட்டின் பூஜைக்கு மனைவியை அழைத்து சென்ற சந்தன் குமார் மீண்டும் மனைவியை வீட்டுக்கு அழைத்து வரும் வழியில் அதுபூர் காட்டுப்பகுதியில் வண்டியை நிறுத்தி மனைவியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் “நான் இருக்கும் போது இன்னொருத்தன் கேக்குதா” எனக்கேட்டு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். மேலும் கொலையில் இருந்து தப்பிக்க போலீசாருக்கு போன் செய்து மர்ம நபர்கள் கொன்றுவிட்டதாக நடமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே சந்தன் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.. கணவனே மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்