இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் திருமணத்திற்கு பிறகு கணவனோ மனைவியோ வேறு ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பு வைத்து கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது அதிகரித்து வருகிறது. இதில் சிலர் உச்சக்கட்டமாக கள்ளத்தொடர்பு குறித்து அறிந்து கொள்ளும் கணவனையோ அல்லது மனைவியையோ கொலை செய்யும் அளவிற்கும் துணித்து வருகின்றனர். மேலும் வெகு சிலர் கள்ள தொடர்பிற்கு தடையாக இருப்பதாக கூறி பெற்ற குழந்தையை கூட கொலை செய்ய அஞ்சுவதில்லை. இது போன்ற ஒரு நிலை தனக்கோ தனது குழந்தைக்கோ வந்து விடக்கூடாது என எண்ணி உத்திரப்பிரதேசத்தில் ஒருவர் செய்த செயல் மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள டோகாட் திக்ரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜ். இவர் கூலி தோழி செய்து வரும் நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் மற்றும் மூன்று வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில் பங்கஜ் வீட்டிற்கு அவரது உறவு முறை மருமகனான சஞ்சீவ் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது பூஜாவிற்கும் சஞ்சீவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர்.
நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி பங்கஜ் வீட்டில் இல்லாத போது அடிக்கடி தனிமையில் இருந்திருக்கின்றனர். இதனை அறிந்த பங்கஜ் இது குறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் பெரியவர்கள் அனைவரும் ஒன்றிணைத்து பஞ்சாயத்து செய்து பூஜா மற்றும் சஞ்சீவை கண்டித்திருக்கின்றனர். ஆனால் தொடர்ந்து சஞ்சீவுடன் பழகி வந்த பூஜா இரவு குழந்தைகள் மற்றும் கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு சஞ்சீவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மனைவியின் மீது சந்தேகமடைந்து அவரது செயலை நோட்டமிட்ட பங்கஜ் அவர் இரவில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு சஞ்சீவுடன் தனிமையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனவே கடந்த (பிப் 14) ஆம் தேதி பூஜா மற்றும் சஞ்சீவை உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பங்கஜ் தனக்கும் தனது மனைவிக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை என் எழுதி கொடுத்து விட்டு சஞ்சீவிற்கும் பூஜாவிற்கு காவல் நிலையத்திற்கு வெளியே அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து “பூஜா என்னையும் குழந்தைகளையும் கொன்று விட கூடாது” என்ற பயத்தில் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்தார். மேலும் பூஜா தனது கள்ளக்காதலன் சஞ்சீவுடனும், பங்கஜ் தனது குழந்தைகளையும் அழைத்து கொண்டு சொந்த ஊரை விட்டு தனி தனியே வெளியேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.