எட்டாவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. போட்டியின் போது சூர்யா குமார் யாதவ் செயலால் மீண்டும் பரபரப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி பெற்றது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது...
எட்டாவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..   போட்டியின் போது சூர்யா குமார் யாதவ் செயலால் மீண்டும் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் நேற்று நடைபெற்றது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய இந்த மெகா மோதல், கொழும்புவில் உள்ள புகழ்பெற்ற ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (பிப் 15) நடைபெற்ற நிலையில் தொடரின் 27-வது ஆட்டமாக அரங்கேறிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 176 ரன்கள் எடுத்து எனவே 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 18 ஓவர்களுக்கு 114 ரன்கள் என்ற விகிதத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அனைத்து  விக்கெட்டுகளை இழந்து தோல்வியை அடைந்தது. எனவே டி 20 வரலாற்றில் தொடர்ந்து 8 வது முறையாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். பின்னர் இஷான் கிஷான் திலக் வர்மாவுடன் சேர்ந்து விளையாடி40 பந்துகளில் 77 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த இஷான் கிஷான் ஆட்ட நாயகன் பட்டத்தை வென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி பெற்றது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வசதியுள்ளது.

மேலும் இந்த போட்டியின் தொடக்கத்திற்கு முன்பு பாகிஸ்தான் கேப்டன் உடன் கை குளுவது பற்றி சூர்யா குமார் யாதவ் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு “இதற்கான பதில் போட்டியின் டாஸ் போடும் நேரத்தில் கிடைக்கும்” என பதிலளித்திருந்த நிலையில் போட்டியின் போது மீண்டும் இரு அணிகளின் கேப்டன்களுக்கு கை குலுக்கி கொள்ளாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com