க்ரைம்

காதல் மனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்… காப்பாற்ற சென்ற மகளையும் தீயில் தள்ளி விட்ட கொடூரம்!

நான் திருந்திவிட்டேன் இனிமே குடிக்க மாட்டேன் உன்னையும் தப்ப பேசமாட்டேன்...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாவட்டம், நல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவர் அதே பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வந்த நிலையில் திரிவேணி என்ற பெண்ணை கடந்த வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேஷ் தினமும் குடித்துவிட்டு வந்த மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.

மேலும் மனைவியை வேறு சில ஆண்களுடன் தொடர்பு படுத்திப் பேசி வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷின் மனைவி திரிவேணி கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது திரிவேணியின் வீட்டிற்கு சென்று “நான் திருந்திவிட்டேன் இனிமே குடிக்க மாட்டேன் உன்னையும் தப்ப பேசமாட்டேன்” என கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

இதனை நம்பிய திரிவேணி தனது குழந்தைகளுடன் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்திருக்கிறார். சிறிது நாட்கள் குடிக்காமல் இருந்த வெங்கடேஷ் மீண்டும் குடித்துவிட்டு தகராறு செய்த தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த (டிச 24) ஆம் தேதி மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ் வீட்டில் இருந்து பெட்ரோலை எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். மேலும் தாயை காப்பாற்ற சென்ற மகளையும் தீயில் பிடித்து தள்ளிவிட்டிருக்கிறார்.

தீயில் கருகி திரிவேணி உயிரிழந்த நிலையில் தப்பித்து வெளியில் ஓடி வந்த சிறுமி கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். பின்னர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திரிவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வெங்கடேஷை தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.