சத்தீஸ்கரில் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மீது அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் அந்த பெண்ணின் கைகளையும் கால்களையும் கட்டி, மொட்டை அடித்து, முகத்தில் கரியைப் பூசி, கொடூரமாகத் தாக்கி, அவர்கள் குழந்தைகள் கண் முன் சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு சுமார் 30 வயதான பெண் தாரா ஜிதேந்திர காசியா காதலித்து அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களுக்கு 4 குழந்தைகளும் உள்ளனர். பல வருட திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தன்னையும் தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தாரா வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஜூன் 14 அன்று, தனக்கு உதவிய ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது, தாராவின் கணவர் அவரை கண்டுபிடித்து விட்டதாகவும், தன்னை வெளியே அழைத்த பிறகு, தனது கணவர் தன்னைத் திட்டத் தொடங்கியதாகவும், தனக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியதாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்தார். அதன்பிறகு தாராவின் கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டி, கொடூரமான தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதில் "அவர் என் தலைமுடியை வெட்டி, தலையை மொட்டை அடித்து, என் முகத்தில் கரியையும் என்ஜின் ஆயிலையும் பூசி, என்னை கடுமையாக அடித்து, சிறுநீர் குடிக்க கட்டாயபடுத்தினார். என்னை உயிருடன் எரித்து விடுவதாக மிரட்டினார்," எனும் பகிர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
தன்னை அவமானப்படுத்தும் செயலில், குழந்தைகளும் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார். அவரது கணவர் குழந்தைகளை தாய் தாராவை அறையுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகளை வைத்து சிறுநீர் அருந்தும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் பிறகு கணவரே தனது சிறுநீரை அருந்தும்படி அவரை தாக்கியதாகவும்” காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியில், குற்றம் சாட்டப்பட்டவர் “ தாரா வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகவும்” குற்றம் சாட்டுவது கேட்கப்படுவதாக தெரிகிறது. அவர், தனது மனைவி முன்னதாக மைத்துனருடனும், பின்னர் மருமகனுடனும் ஓடிப்போய் விட்டு, அதன் பிறகு தன்னிடம் திரும்பி வந்ததாக கூறி அடித்துள்ளார்.
தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்த அந்தப் பெண், பல ஆண்டுகளாக தன் கணவர் தன் குணநலன்கள் மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும், தன்னைத் தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். "ஆரம்பத்திலிருந்தே சந்தேகம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,தெரிவித்தார்.” பாதிக்கப்பட்ட எனக்கு நீதி வேண்டும், அவர் தண்டிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
பெண்ணின் புகாரின் அடிப்படையில், காவல்துறை பாரதிய நியாய சம்ஹிதையின் பல பிரிவுகளின் கீழ், கணவனால் கொடுமை, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல், ஆபாசமான செயல்கள் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் கொலை மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து FIR போடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தக் காணொளி வெளிவந்த பிறகு, புலனாய்வாளர்கள் குற்றச்சாட்டுகளை மேலும் விரிவாக ஆய்வு செய்தபோது, கூடுதல் மற்றும் மிகவும் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்