உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், கருவுறுதல் பரிசோதனை செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இருவரும் 2021 நவம்பர் 19 அன்று லக்னோவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான முதல் நாளிலிருந்தே தன் கணவர் உடல்ரீதியான நெருக்கத்தை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி, ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கணவரும் அதற்காக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, “மருத்துவசிகிச்சை முடிந்தவுடன் நிலைமை சரியாகிவிடும் என்றும் மனைவிடம் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளார்.
அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்தும் திருமண உறவில் எந்த ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி, தனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் விந்தணு மாதிரியை பரிசோதனைக்கு கேட்ட போது, கணவர் அந்தப் பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவிக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது, இந்தப் பிரச்சினையை கேட்கும்போதோ அல்லது சிகிச்சை பெறுமாறு அவரை வலியுறுத்தும்போதோ அவர் ஈடுபாடு காட்டவில்லை என்றும், இதனை காரணமாக வைத்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் குடும்பத்தினரும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டதாகவும் அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை பெற மறுத்தது குறித்து தனது கணவரிடம் கேள்வி எழுப்பியதால் தான் தாக்கப்பட்டதாகவும், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய் கொண்டு வராவிட்டால் வீட்டிற்கு வரக்கூடாது என்று கணவரின் குடும்பம் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஜூலை 12 அன்று அவரது கணவர், மாமியார், மைத்துனர், நாத்தனார் மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்