2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 42 வயதான எலிசபெத் ஃபிரிட்ஸ்ல் என்ற பெண் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சூரிய ஒளியில் தன் குழந்தைகளோடு காலடி எடுத்து வைத்தார். வெளியே சொல்ல முடியாத பல சித்திரவதைகளை அனுபவித்ததோடு அந்த தொடர் பாலியல் சித்திரவதைகளை அவரது தந்தையே செய்துவந்துள்ளார் என்ற இன்னும் கொடூரமான உண்மை வெளிவந்த நாட்டையே உலுக்கியது.
எலிசபெத் ஃபிரிட்ஸ்ல், 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி, ஆஸ்திரியாவின் ஆம்ஸ்டெட்டன் என்ற சிறிய நகரில் பிறந்தார். அவர் ஜோசப் மற்றும் ரோஸ்மேரி ஃபிரிட்ஸ்ல் என்ற தம்பதியரின் நான்காவது குழந்தையாக பிறந்தார். எலிசபெத்திற்குப் பிறகு, ஜோசப் மற்றும் ரோஸ்மேரிக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்ததால், குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஏழானது. இந்த குடும்பத்தின் வாழ்க்கை என்பது நினைத்ததை விட நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், இங்குதான் யாராலும் நம்ப முடியாத சில நிகழ்வுகள் வெளிவந்தன. அதாவது எலிசபெத்தின் தந்தை சில பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் ஆனால், அவற்றில் சில குற்றங்கள் காவல் நிலையத்தில் புரளிக்கப்படாமலேயே இருந்துள்ளது. அதன் பின்னர் 21 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயலுக்காக ஜோசப் கைது செய்யப்பட்டு 12 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.
11 வயதான எலிசபெத் அவரது தந்தையால் பலமுறை பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு ஓடியும் சென்றுள்ளார். ஆனால், அவரது தந்தையான ஜோசப் அவரை சரியாக தேடி மீண்டும் வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார். இந்நிலையில் 1984-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், எலிசபெத் ஃபிரிட்ஸ்ல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இவர் ஏற்கனவே இதுபோல பலமுறை செய்துள்ளதால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், யாராலும் அவரது தந்தையை சந்தேகப்பட முடியவில்லை. "எலிசபெத் எங்கோ ஓடிப்போய் ஒரு வழிபாட்டுக் குழுவில் சேர்ந்துவிட்டாள்" என்று ஜோசப் உறுதியாக நம்பி அனைவரையும் நம்பவும் வைத்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக எலிசபெத் எழுதியதாகக் கூறப்பட்ட ஒரு கடிதம் குடும்ப வீட்டிற்கு வந்தது. அதில், "தன்னைத் தேட வேண்டாம்" என்று கூறப்பட்டிருந்தது. எலிசபெத் தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டுச் சென்றுள்ளார் என்றும், அவர் ஒரு வழிபாட்டுக் குழுவில் சிக்கிக்கொண்டதால் இனி வீடு திரும்ப மாட்டார் என்றும் ஜோசப் தன் கருத்தில் உறுதியாக இருந்துள்ளார்.
ஆனால், அந்த ரகசியம் இப்பொது உடைந்து விடும். அதாவது ஜோசப்பின் வீட்டின் 'பேஸ்மென்டில்' கதவை பொறுத்த எலிசபெத்தின் உதவியை நடுவது போல வீட்டின் அடிப்பகுதிக்கு கூட்டி சென்றுள்ளார். உதவுவதற்காக சென்ற எலிசபெத்தின் கடைசி நாள் அதுவாகத்தான் இருந்தது. அப்போது, எலிசபெத்தை பின்னாளில் இருந்து மயக்கமருந்து தடவிய துணியால் மூக்கை பிடித்து மயக்கமடையச் செய்து 'பேஸ்மென்டில்' அடைந்துள்ளார் அவரது தந்தை ஜோசப். இது எலிசபெத்தின் அம்மாவிற்கு கூட தெரியாது அந்த அளவுக்கு மிகத்துல்லியமாக தீட்டப்பட்ட ஒரு திட்டம். காலப்போக்கில், எலிசபெத்தின் காணாமல் போன விவகாரம் மங்கிப்போனது, மேலும் அதிகாரிகள் தங்கள் தேடுதல் முயற்சிகளைக் காவல்துறையினர் குறைத்துக்கொண்டனர்.
பின்னர், ஜோசப் அடிக்கடி பேஸ்மென்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அது சந்தேகத்தை ஏற்படுத்துவதுபோல் யாருக்கும் தோன்றவில்லை. இதனைதொடர்ந்து, 1986-ல், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளின் விளைவாக எலிசபெத் கர்ப்பமானார். அதாவதை தனது மகளை கர்ப்பமாக்கினார் ஜோசப். ஆனால் சுமார் 10-வது வாரத்தில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. எலிசபெத் ஆரம்பத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1988-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவர் ஒரு மகளைப் பெற்றெடுத்தார், அக்குழந்தைக்கு அவர் கெர்ஸ்டின் என்று பெயரிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1990-ல், முதல் மகன் ஸ்டீஃபன் பிறந்தான். எலிசபெத்தும், குழந்தைகளும் உயிரோடு இருக்க, ஜோசப் உணவும் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தார். அந்த இடத்தில இருந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், எலிசபெத் தனது குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இருந்தார். அவரது குழந்தைகளுக்கு படிக்க சொல்லித்தருவது, விளையாடுவது என்று அனைத்தையும் செய்தார்.
இந்நிலையில், 1992-ல், எலிசபெத் மற்றொரு மகளைப் பெற்றெடுத்தார், அவருக்கு லிசா என்று பெயரிட்டார். ஆனால், அவருடைய மற்ற இரண்டு குழந்தைகளைப் போலல்லாமல், லிசா எலிசபெத்திடமிருந்து பிரிக்கப்பட்டாள். ஜோசப் அந்தக் குழந்தையை மாடிக்குக் கொண்டு சென்று, தன்னால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இயலாததால், தன் பெற்றோர் அதைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட எலிசபெத்தின் கடிதம் ஒன்றுடன் சேர்த்து, அக்குழந்தையை அந்தக் குடும்பத்தின் வீட்டு வாசலில் கவனமாக வைத்தார் ஜோசப். ஜோசப் புனைந்த கதையை காவல்துறையினரும் அண்டை வீட்டாரும் நம்பினர். பின்னர், 1994-ல், எலிசபெத் மோனிகா என்ற மற்றொரு மகளைப் பெற்றெடுத்தார், அந்த குழந்தையையும் எலிசபெத்திடமிருந்து பிரித்தார் ஜோசப். பின்னர், 1996-ல், எலிசபெத் மைக்கேல் மற்றும் அலெக்சாண்டர் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், மைக்கேல் உயிர் பிழைக்கவில்லை.
பின்னர், 2002-ல் எலிசபெத் தனது ஏழாவது மற்றும் கடைசி குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு அவர் ஃபெலிக்ஸ் என்று பெயரிட்டார். ஃபெலிக்ஸை ஜோசப் அழைத்துச் செல்லவில்லை, மாறாக அவன் தனது தாயுடனும் இரண்டு மூத்த உடன்பிறப்புகளுடனும் சிறைப்பட்டிருந்தான். 2008-ம் ஆண்டில், ஜோசப் எலிசபெத்தை 24 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருந்தார்; அந்தக் காலகட்டத்தில் அவர் கற்பனை செய்ய முடியாத கொடுமைகளுக்கு ஆளாகியிருந்தார். அப்போது 19 வயதான கெர்ஸ்டினும், தன் வாழ்நாள் முழுவதும் பேஸ்மென்டில் வாழ்ந்து வந்ததால் நோய் ஏற்பட்டது. கெர்ஸ்டினுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு எலிசபெத் ஜோசப்பிடம் கெஞ்சினார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜோசப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை செய்தனர். ஆனால், அது எலிசபெத்தின் வழக்கை மீண்டும் தோண்ட வழிவகுக்கப்பட்டது.
இறுதியாக 2008, ஏப்ரல் 26 அன்று, எலிசபெத் இறுதியாகத் தனது சிறையின் சுவர்களுக்கு வெளியே வந்து உலகத்தை கண்டார். தனது குழந்தையை பார்ப்பதற்காக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அப்போது, காவல்துறையினர் வருடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் பயந்த எலிசபெத் பின்னர் காவல்துறையினர் தைரியம் அளித்ததன் அடிப்படையில் நடத்தபயாங்கறதை ஒப்புக்கொண்டார். ஜோசப் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். தற்போது 89 வயதாகும் அவர், மேல் ஆஸ்திரியாவில் உள்ள கார்ஸ்டன் அபே சிறையில் தனது மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் கழித்து வருகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.