

அமெரிக்காவில் 17 வயதுடைய வெளிநாட்டில் இருந்து வந்து கலிபோர்னியாவில் படிப்பதற்காக வந்த மாணவியை மாதக்கணக்கில் தன் கட்டுப்பாட்டில் வைத்து, பின்னர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கலிபோர்னியாவின் முன்னாள் மேயரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
58 வயதான ராபர்ட் பிரையன் பாசெட், மூன்று கொடூரமான குற்றங்களான குழந்தை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு கடந்த புதன்கிழமை அன்று நான்கு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது 'நம்பிக்கைத் துரோகம்' என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அந்தப் பதின்மவயதுப் பெண், தனது குடும்பத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து வந்துள்ளார், மேலும் 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரை பாசெட்டின் பிக்ஸ் வீட்டில் மாணவியாகத் தங்கியிருந்தார். பாசெட்தான் அவரை பார்த்துக்கொள்ளும் நபராக இருந்துள்ளார். அதாவது அந்த பெண் ஒரு 'பேயிங் கெஸ்ட்' போல அவரது வீட்டில் தங்கியுள்ளார். அந்த பெண்ணுக்கு 17 வயதாக இருந்தபோது, பாசெட் பல மாதங்களாக அந்த பெண்ணை தன் கட்டுப்பாட்டில் வைத்து, பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில், சுமார் 2,000 மக்கள் வசிக்கும் வடக்கு கலிபோர்னியாவின் ஒரு சிறிய நகரமான பிக்ஸின் மேயராகவும் பாசெட் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியின் பலவீனமான நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாசெட் அந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அந்த பதின்மவயது பெண் பாசெட்டை முழுதாக நம்பிய பிறகு அந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தனக்கு நடந்த சம்பவத்தாலும், தான் நம்பிய ஒருவர் தனக்குத் துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணத்தாலும் தொடர்ந்து மனரீதியாக துன்பப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 9 அன்று, பிக்ஸில் உள்ள பாசெட்டின் வீட்டில் காவல்துறை சோதனை வாரண்டைப் பிறப்பித்து அவரைக் கைது செய்துள்ளனர். அதன் பின்னரே இந்த வழக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது. புலனாய்வாளர்கள் இறுதியில் பாதிக்கப்பட்டவரை அழைத்து அவரது சொந்த நாட்டிற்கு தொடர்பு கொண்டபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பாசெட், பிக்ஸ் நகர மன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றியதோடு, 2022 முதல் டிசம்பர் 2024 வரை அந்நகரத்தின் மேயராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில் அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டதன் பெயரில் அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாநில சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலையானதும், பாசெட் 10 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.