க்ரைம்

"ஸ்பா என்ற பெயரில்.. சட்டவிரோத பாலியல் தொழில்!" பேஸ்புக் மூலம் விளம்பரம்.. ரகசிய சோதனையில் சிக்கியது எப்படி?

கையும் களவுமாக சிக்கிய மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில்...

Muthu Lakshmi

சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி கடை ஒன்றில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தி வருவதாக மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லில்லி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று ரகசிய சோதனையை மேற்கொண்டனர்.

அங்கு ஸ்பா என்ற பெயரில் பாபு என்கிற நபர் பெண் ஒருவரை வைத்து, நெற்குன்றத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வரவழைத்து பாலியல் தொழில் செய்து வருவதை கண்டுபிடித்தனர். கையும் களவுமாக சிக்கிய மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அருள் பிரகாஷ் என்பவர் இதனை நடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த பாபு என்பவர் முடி வெட்டும் வேலை செய்து வருவதும் இவர்கள் முகநூல் வழியாக விளம்பரம் செய்து அதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் அங்கு வந்திருந்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வாடிக்கையாளரை விசாரணை செய்தபோது முகநூலில் விளம்பரத்தை பார்த்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இங்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் இங்கு வருவதற்கு முன்பே முன்பதிவாக ரூபாய் 1500 G-pay மூலம் செலுத்தியதும்  விசாரணையில் தெரியவந்தது. மேலும் உரிய அனுமதியின்றி இப்பகுதியில் Spa நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. எனவே அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். பாலியல் தொழில் நடத்திய பாபு (48) மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கடையின் உரிமையாளர் அருள் பிரகாஷ் உட்பட இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.