க்ரைம்

9-ம் வகுப்பு மாணவனுடன் தகாத உறவு.. பார்க்க கூடாததை பார்த்த சிறுவன்! திட்டம் போட்டு நடந்த கொலை.. ஜோடியாக கைது?

19 வயதான பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம்...

Muthu Lakshmi

தெலங்கானா கம்மம் மாவட்டத்தில்,10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த 19 வயதான பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 15 வயது சிறுவன், கல்லூரு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சத்துப்பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்துள்ளார். தசரா விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

அபர்ணா (20) என்ற பெண், சுமார் ஆறு மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து, அதே கிராமத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி உள்ளார். மேலும் அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார் அபர்ணா. அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அக்டோபர் 20 அன்று சிறுவன் ரவி, அவர்கள் இருவரும் ஒரு அறையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து கண்டித்துள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்தினர்களிடம் சொல்லிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். 

இதையடுத்து தங்கள் தகாத உறவு வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், அந்த இருவரும் ரவியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளனர். அக்டோபர் 21 அன்று, அந்தச் சிறுவன் ரவியை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து வந்துள்ளான். அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து, ரவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதை அருந்திய சிறிது நேரத்தில், ரவிக்கு தொண்டையில் எரிச்சல், வாயில் கொப்புளங்கள் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது 

ஒன்றும் புரியாத ரவி என்னவென்று கேட்டபோது.. அந்த குளிர்பானத்தில் விஷம் பூச்சி மருந்து கலந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஒட்டி வந்த ரவி, தனது குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார். முதலில் அவரை கம்மம் அரசு மருத்துவமனையில் சேர்த்த பின்னர், உடல்நிலை மோசமடைந்ததால், வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 8 அன்று சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகார் மற்றும் அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, கல்லூரு போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.

14 வயது சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும், குற்றச்சாட்டப்பட்ட பெண் சத்துப்பள்ளி துணைச் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கூறப்படும் கொலை குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.