காட்டிற்குள் உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்! வேறொருவருடனும் தொடர்பா?

நேற்று பென்னாலூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டுப் பகுதிக்கு மேகலாவை அழைத்துச் சென்றுள்ளார்
thiruvallur
Published on: 
Updated on: 
1 min read

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர்பேட்டை அருகே கள்ளக் காதலர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில், சென்றான்பாளையம் பகுதியை சேர்ந்த மேகலா (24) என்ற இளம்பெண்ணை அவரது கள்ளக்காதலன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

ஆந்திராவை சேர்ந்த மேகலா என்ற பெண் சென்றான்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் துர்க பிரசாந்த் (28) என்ற இளைஞருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மேகலா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. முதலில் கண்டித்த கள்ளக்காதலன் துர்க பிரசாந்த், பின்னர் மேகலாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

thiruvallur crime

இந்நிலையில் நேற்று பென்னாலூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டுப் பகுதிக்கு மேகலாவை அழைத்துச் சென்றுள்ளார் துர்கா பிரசாந்த். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று, வேறொரு பகுதியில் சுற்றி வந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்துள்ளது காவல்துறை.

முதற்கட்ட விசாரணையில், மேகலா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் கள்ளக்காதலன் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றிய பென்னலூர்பேட்டை போலீசார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.